Thursday, 20 November 2014

கதை உண்மையாகுமா ????

என் பெயர் அருண் , கடைசி பெஞ்சும் அதற்கு அடுத்த பெஞ்சிலும் மாறி மாறி அமர்ந்து பள்ளி கல்லூரி வாழ்க்கையை முடித்தவன். அப்படியே வேலைக்கு சென்று கற்றதனால் பெற்ற பலனை அனுவும் உபயோகிக்காமல் , செய்வதனால் பெரும் அனுபவத்தை கொண்டே பணி புரிந்து கொண்டு இருக்கின்றேன். எல்லோரையும் போல காதல் வயப்பட்டேன் இரண்டு முறை அதுவும் ஒரு தலையாக முடிந்து போனது. பெண்களை கண்டால் ஒரு வெறுப்பு என்று வெளியில் சொல்லி கொண்டு இருந்தேன் உள்ளுக்குள் ஆசை எண்ணிலடங்காமல் கனந்து கொண்டே இருக்கின்றது. அலுவல் ரீதியாக எந்த ஒரு பெண்ணிடம் உரையாடும் போது கூட நடுக்கத்துடன் பேசுவது எனக்கு வாடிக்கையாக இருந்தது. கண்ணை பார்த்து பேசாத ஆண்களை பெண்கள் எளிதாக கணித்துவிடுவார்கள் என்பார்கள் நானும் அவ்வாறே கண்ணை மட்டும் இல்லை அவர்களையே பார்க்காமல் வானம் பார்த்து பேசி என்னை நானே கீழிறக்கி கொண்டேன்.அந்த நிலைக்கு கூட எதாவுது வியாதியின் பெயராக இருக்கும் ,அதை பல காலமாக தேடிக்கொண்டே இருக்கின்றேன் .


 தனிமையிலே பல நேரங்கள் என்னை நான் நேசித்து கொண்டு இருந்தேன், ஆனாலும் பொதுவெளியில் என்னுடைய நிழல் கூட என்னை வெறுத்தது. இப்படியே போகிகொண்டிருக்கும் வாழ்க்கையில் சூழ்நிலை என்னையும் அவளிடம் கொண்டு சேர்த்தது. அவள் பெயர் தமிழ். என்ன ஒரு அழகான ரசனையான பெயர் "தமிழ்" சொல்லும் போதே இனிக்கின்றது தானே. அப்படி தான் இருந்தது அவளை பார்க்கும் போதும். செல்ல அணைப்பிலும் சிணுங்கும் பேச்சிலும் சீறும் சிரிப்பிலும் கவரும் பார்வையிலும் வளைந்து நெளியும் அழகியலிலும் மொத்தமாக என்னை வீழ்த்தி விட்டாள். அவள் என்னை தேடி வரவில்லை நான் தான் அவளை தேடி சென்றேன் ஏன்னென்றால் ???? அவள் பெண் நான் ஆண் என்று கூட கூறலாம் ஆனால் உண்மை ..........????


தமிழ் அவளை நான் முதலில் சந்தித்தது என்னவோ வேண்டா வெறுப்பாக தான் ஆனால் அப்பொழுது கூட நான் அவளை தேர்ந்து எடுக்க மாட்டேனா என்று ஏங்கினாள் என் கையை பிடித்து ? நானோ வெறுப்பில் கையை உதறிக்கொண்டு விடுபட்டேன் அவளிடம் இருந்து.பின்னர் சில பல பெண்களை பார்த்து அவர்களின் வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கைக்கு வேதனைப்பட்டு கொண்டே தேர்ந்து எடுக்க நேரம் எடுத்து கொண்டேன். ஆம் நான் அவளை கண்டது விபச்சார வீட்டிலே இல்லை இல்லை விபச்சார தெருவிலே வேண்டாம் அது ஒரு விபச்சார ஊர்.அதுவே சரியாக இருக்கும்.


ஆட்டுசந்தையில் ஆடுகளை தேர்ந்து எடுக்கும் போது ஆடுகளுக்கு தெரியாது ஏன் என்று இங்கே ஆடுகளாய் இருக்கும் மாதவிகளுக்கு தெரியும் ஏன் என்று. முதல் முறை நான் இவ்விடத்தை காண்கிறேன் குற்ற உணர்ச்சி என்னை வாட்டியதை விட இவர்களின் வேதனையான வாழ்க்கை  முறையே என்னை சோதிக்க செய்தது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை தேர்ந்து எடுக்க மாட்டானா என்ற ஏக்கத்துடன் பார்க்கும் பார்வையில் என் மனம் நொறுங்கிவிட்டது.


 இவ்வாழ்கையே வேதனையான ஒன்று என்றால், அவலட்சணமாக இருக்கும் பெண்களை அங்கு காணும் பொழுது கண்ணீரே வந்துவிட்டது கடவுள் இந்த நரக வாழ்க்கையை கூட அவர்களுக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை. அவர்களின் நிலையில் இருந்து யோசித்தால் எப்படி இருக்கும்? அங்கு இருக்கும் 200 பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்றுவிடுகின்றனர்.பின்னர் இவர்கள் மட்டும் தனிமையில் யாராலும் தேர்ந்து எடுக்கப்படாமல் இருக்கும் பொழுது அவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று நினைத்தாலே நெஞ்சம் அழுகிறதே. அங்கே தன்னுடைய அங்கங்களை வெளிகாட்டி அழைக்கும் பெண்கள் நிலை அதைவிட கொடூரமாக இருந்தது எப்படியாவுது தன்னை அழைத்துவிடுவான் என்று அவர்களின் செய்கையினால் எனக்கு  காமத்தின் மேல் இருந்த விருப்பம் மொத்தமுமாக அழிந்து தான் போனது.


 இப்படி வேதனைபட்டாலும் நானும் ஒரு சராசரி மனுஷன் தானே ஆசை யாரை தான் விட்டது, அப்படியே தேடிக்கொண்டு இருக்கும் பொழுது நினைத்தேன்... ஆசையாக வந்து என் கையை அன்பாக பிடித்தவளை அதுவும் அழகாக தானே இருந்தால்,ஏன் அவளிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டேன்? அவளையே அழைப்போம் என்று அவள் இருக்கும் இடம் சென்று பார்த்தேன். இம்முறை எப்படியும் இவன் எடுக்க மாட்டான் என்று வேதனையுடன் என்னை அவள் பார்க்கும் பொழுது, என் கை அவள் வேண்டும் என்று அவளை நோக்கி நீட்டியது. அவளோ கண் கலங்கிய சிரிப்பில் உண்மையில் நாணம் கொண்டாள். அந்த கண்ணீருக்கு ஆனந்த கண்ணீரா என்று தெரியவில்லை.


அவளை தேர்ந்து எடுத்தவுடன் ஆவலுடன் அல்ல அவளுடன் அருகில் அமரும் போதே படபடப்பு தொடங்கிவிட்டது.எனக்கு கதை கேட்க எப்பொழுதுமே விருப்பம் ஆகையால் அவளிடம் அவள் கதை கேட்டேன். தமிழ் சிரித்தது நானோ அதிர்ந்தேன் அவளின் அடுத்த வார்த்தையில். நீங்கள் இந்த ரகமா என்று கேட்டு கொண்டே சிரித்தாள். எனக்கோ புரியவில்லை நான் இது தான் முதல் முறை என்று என்னை பற்றி சிறுகுறிப்பு போல கூறினேன். அவள் அதற்கும் சிரித்தாள் நிறைய பேர் இப்படி தான் சொல்லுவாங்க அதுல ஒரு சிலர் உங்களை போல எங்களை பற்றி கேட்பாங்க ஆனா எல்லாரும் கடைசியா செய்யறது ஒன்னு தான் என்று மீண்டும் சிரித்தாள். இம்முறை சிரித்து கொண்டே மேலாடையை விடுவிக்க முயலும் போது வேண்டாம் பேசுவோம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்ல அவளோ அதற்க்கும் சரி என்று கூறிவிட்டாள்.


பேசினேன் பேசினேன் என்னுடைய மொத்த வாழ்க்கையும் அவளிடம் கூற அவளுக்கோ அதிர்ச்சி ஏன் நான் இப்படி பேசுறேன் என்று நினைத்தாலோ என்னவோ அவள் உறுதி செய்து கூறினால் ஆம் நீ முதல் முறை தான் வந்து இருக்கிறாய் என்று. எனக்கோ ஆச்சிரியம் ஒரு பெண் ஒருவனை அவனின் பேச்சில் இருந்து எளிதாக அவனைப்பற்றி கணித்துவிடுகிறாள் என்று. பின்னர் அவளை பற்றி கூற தொடங்கினாள் சரியாக அவள் கணவன் தொலைபேசியில் அழைத்தான்.


அவளுடைய தொலைபேசியில் ஹப்பி என்ற பெயரில் அழைப்பு வருவதை நான் பார்த்தேன், அவள் என்னை பார்த்து சிரித்தாள். எடுத்து அவனோடு சில நேரம் பேசினால். நான் அதற்குள் அறையில் இருக்கும் பால்கனி சென்று ஒரு சிகரட்டை பற்றவைத்து அடிக்க தொடங்கினேன் . என் மனம் என்னன்னவோ யோசிக்க தொடங்கிற்று, ஏன் இங்கே வந்தேன்? பின் ஏன் வருத்தபடுகிறேன் ?அவர்களுக்காக நான் ஏன் இப்படி யோசிக்கின்றேன்? அட வந்தது தான் வந்தாச்சு ஒரு தடவ செஞ்சுட்டு போயிட வேண்டியது தான் என்று இறுதியாக முடிவு செய்து விட்டேன். அதற்குள் சிகரட்  சரியாக முடிய, அவள் என்னை பின்னால் இருந்து மென்மையாக கட்டிக்கொண்டாள். முதல் முறை பெண்ணால், என் உடல் வெப்ப மயமானது. அவளுடைய அங்கங்கள் என்னோடு உரசுமிடையில் இனம் புரியா ஒன்று என்னை தூண்டி அவளிடம் இருந்து மெதுவாக விடுபட்டேன் முழுமையாக அல்லாமல் என் கைகளை மட்டும் அவளிடம் கொடுத்து இருந்தேன்.


பின்னர் கேட்டேன்  "எத்தனை வருஷமா இப்படி இருக்க "


"ஹ்ம்ம் 5 வருஷம் ,சரி பசிக்குது எதாச்சும் ஆர்டர் பண்ணுறியா "


"ஹே முன்னயே சொல்லிருக்கலாம்ல நான் கூட மறந்துட்டேன் இரு ஆர்டர் பண்ணுறேன் உனக்கு என்ன பிடிக்கும் ? "


"உனக்கு பிடிச்சதே சொல்லு டார்லிங் "


"டார்லிங் வேணாம் எனக்கு சிரிப்பா வருது "


"டார்லிங் தான் எங்களோட வாழ்கையே "


"ஹ்ம்ம் சரி பிரியாணி மட்டன் ஓகே வா "


"ஹ்ம்ம் ஓகே "


ரிஷப்சனுக்கு அழைத்து ஆர்டர் செய்து விட்டு அவளை பார்த்தால் , என் முகம் வேர்த்து விட்டது. ஆடை ஏதும் இல்லாமல் உள்ளாடைகளுடன் இடுப்பில் கை வைத்து கொண்டு என்னை ஏற இறக்கமாக பார்த்து கொண்டு இருக்கின்றாள். என்ன செய்வது என்று புரியாமல் முகத்தை துடைத்து கொண்டு அவள் அருகில் நெருங்குகிறேன். இடது பக்க மார்பில் ஏதோ பற்களால் கடித்தது போல நன்கு தெரிகின்றது அவளின் நிறத்திற்கு, ஆனால் அதை பற்றி யோசிக்க எனக்கு தோன்றவில்லை. முழுமையாக இப்பொழுது நான் ஒரு பெண்ணை அனுபவிக்க போகிறேன் என்ற குற்றவுணர்வு கூட என்னை விட்டு விலகி என்னுடைய பசிக்கு பலியாகி போனது. அவளும் அப்படியே என்னை நோக்கி நெருங்கி வந்து என் கைகளை பற்றி இழுத்து அனைத்து கொண்டாள்.


ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்


திடுக் என்று அவளிடம் இருந்து விலகினேன்.அவளோ ஹே லஞ்ச் டியர் என்று என்னை சமாதானபடுத்தினாள்.


இருவரும் ஒன்றாக குளிக்கலாம் வா என்று என்னை அழைக்க, நானோ வேண்டாம் என்று தவிர்த்து விலகினேன். அவள் குளித்து கொண்டு இருக்கும் போது ஏனோ தெரியவில்லை தெரியாமல் பார்க்கலாமா என்று தோன்றியது. அதுக்காக சில நிமிடங்கள் வெட்கப்பட்டேன். இப்படி கேவலமான எண்ணங்கள் ஏனோ தெரியவில்லை அடிக்கடி எனக்கு வரும். அது எனக்கு மட்டும் தானா இல்லை எல்லோருக்குமா என்று கூட தெரியவில்லை.

குளித்து முடித்து விட்டு வெறும் டவலோடு வந்தாள். அவள் அழகில் தலை சுற்றி போனால் ரசிக்க முடியாது என்று நிற்கும் மரமாகி போனேன். அருகில் வந்து கன்னங்களை கிள்ளி சென்றாள்.


அந்த மயக்கத்தோடு நானும் குளிக்க சென்றேன். குளிக்கும் போது இன்னொரு கேவலமான எண்ணம் நண்பன் சொன்னது நினைவில் வந்தது, "மச்சி மேட்டருக்கு முன்ன தனியா போகி செல்பி போட்டுறு அப்போ தான் நீ பண்ணுறப்போ லேட் ஆகும் செம்மையா இருக்கும் ". அடச்ச என்னடா இது இப்படியே தோணுது என்று வெறுப்பாகி சீக்கிரம் குளித்து விட்டு வந்தேன்.


சரிவா சாப்பிடலாம் என்று கூறி கொண்டே எடுத்து வைத்து கொண்டு இருந்தாள், இம்முறை அரை அடி உள்ள டவுசர் அதுவும் எனக்கு பிடித்த பிங்க் கலர் மேலே அதற்கு மேட்ச்சான ஒரு அடி உள்ள டி-ஷர்ட். அற்புதமாக இருந்தாள் தமிழ்.


“ஏன் காலையில சாப்பிடலையா தமிழ் ???”


"இல்ல ஏன் கேட்குற "


"ரொம்ப பசில இருக்குற மாறி இருக்கியே அதான் வேற ஒன்னும் இல்லை"


"நீ என்ன கூப்பிட்டு வரலைனா எனக்கு இப்ப வரைக்கும் சாப்பாடு கிடைச்சு இருக்காது "


"புரியல தமிழ் "


"அது அப்படி தான் கஸ்டமர் வாங்கிதறது இல்ல அவுங்க தர டிப்ஸ் வச்சி சாப்பிடுறது அது தான் எங்களுக்கு சாப்பாடு "


ஒரு நிமிடம் மொத்தமுமாக அதிர்ந்து தான் போனேன்.


"அப்போ யாருமே உன்ன எடுக்கலைனா ? "


"அவ்வுளோதான்  தண்ணீர் தான் சாப்பாடு "


"உங்க ப்ரெண்ட்ஸ் அவுங்களும் இப்படி தானா? "


"ஆமா எல்லாருக்கும் இப்படி தான் எனக்கு பரவா இல்லை எப்படியாச்சும் யாராச்சும் வந்துருவாங்க "


அவள் சொல்லுவதின் அர்த்தம் புரிந்தது முன்னயே சொன்னது போல அவலட்சணமான பெண்கள் இந்த தொழிலில்  எப்படி தான் இருப்பார்களோ என்று மீண்டும் வருத்தப்பட்டு கொண்டே அவளிடம் கேட்டுவிட்டேன்.


"அப்படி இல்லை கொஞ்சம் கஷ்டம் தான் இப்போ சில பேர் நல்ல அழகான பொண்ணுங்கள எடுக்க மாட்டாங்க ஏன்னா சரியான கம்பெனி இருக்காது என்று நினைப்பாங்க அப்படி இருக்குறவுங்க இவங்களை போன்றவர்களை எடுப்பாங்க கம்பெனி நல்லா இருக்கும் அப்படின்னு அதே போல நல்லா பார்த்துபாங்க "


"ஓஹோ இது வேறயா என்ன இருந்தாலும் அவுங்க பாவம் பா "


"இவ்வுலோ பேசுற நீ அவுங்கள எடுத்து இருக்க வேண்டியது தானே "


அவள் முன் வெட்கி தலை குனிந்தேன்.


"நானும் சராசரி மனுஷன் தானே முதல் முறை அழகான பொண்ண தான் பார்க்கணும் அப்படின்னு நினைச்சேன் ஆனா அவுங்கள பாக்குறப்போ வருத்தமா இருந்துச்சு நான் என்ன பண்ணுறது "


"ஹே ஹே கூல் நான் சும்மா சொன்னேன் "


"உங்க லைப் நிஜமாவே ரொம்ப பாவம் தமிழ்"


அவளின் கண்கள் கலங்கி கண்ணீரும் வந்துவிட்டது.முகத்தை மூடிக்கொண்டு பாத்ரூம் சென்றுவிட்டாள்.தேவை இல்லாம அவளையும் கஷ்டபடுத்திட்டோமோ என்று வருத்தமாக இருந்தது.அவளோ மீண்டும் அந்த பழைய சிரிப்புடன் வந்தாள்.


"அருண் என்ன ரொம்ப நெருங்கி வர "


"அப்படி இல்ல தமிழ் தெரிஞ்சிக்க தான் "


"நல்ல பையனா இருக்குற அப்புறம் ஏன் இப்படி "


"எல்லாம் வயசு கோளாறு 27,28 வயசு ஆகுது கல்யாணத்த பண்ணி வச்சா நான் ஏன் இங்க வாரேன், ஆமா உனக்கு கல்யாணம் ஆச்சா சொல்லவே இல்லை ஹப்பி காளிங்குனு வந்துச்சு "


" அதுவா நேத்து வந்த கஸ்டமர் அவரு என்ன கல்யாணம் பண்ணிக்க போறாராம் அவரே என் போன்ல ஹப்பினு சேவ் பண்ணிட்டு போனாரு, நாளைக்கு வரேன்னு சொல்லுறான் நாய் நான் வேணாம்னு சொல்லிட்டேன்"


"ஏன் தமிழ் "


"அவன் டார்ச்சர், அதை பண்ணு இதை பண்ணு, இப்படி அப்படின்னு சாவடிச்சிடுவான் "


"புரியுது தமிழ் "


"அப்புறம் இப்படி நாங்களே ஹப்பினு ஒரு நம்பர் வச்சிக்குவோம் ஒரு சில சமயம் அது எங்களுக்கு ஹெல்ப் பண்ணும் அவசரத்துக்கு"


இதை எல்லாம் ஏன் என்ட சொல்லுறா??? என்று யோசிக்கும் போது, எதிர்பார்த்து இருந்தது போல என் இதழ்களை கவ்வினாள்...!


கலவியில் எனக்கு மிகவும் பிடித்தது இதழோடு இதழ் சேர்த்து நீண்ட நேரம் பரிமாறிகொள்ளும் முத்தமே. அதை முதல் முறை நான் அனுபவிக்கும் போது பரவசம் கொண்டேன் கிட்டத்தட்ட என்று அல்லாமல் உச்சமே அடைந்தேன். அப்பொழுது என் உடல் சிலிர்த்தது அதை அவளும் உணர்ந்ததாலோ என்னவோ முத்தத்தை விடுவித்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.


"ஹே என்ன இதுக்கே ஃப்ளாட்டு"


"வேற என்ன செய்யுறது கண்ட்ரோல் பண்ண முடியலையே"


"நீ உண்மைலயே பர்ஸ்ட் டைம் தான் அருண்"


"தமிழ் நீ நம்ப மறுத்தாலும் உண்மை அது தான்"


"ஓகே ஓகே போ க்ளீன் பண்ணிட்டு வந்து சாப்பிடு,அப்படியே வச்சிருக்க பாரு"


"எனக்கு போதும் தமிழ், நீ கொடுத்த முத்தமே இன்னும் நாலு நாளைக்கு பசிக்காது"


"ஹா ஹா ஹா இன்னும் நிறைய இருக்கு இதுக்கே இப்படினா ??? "


"நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே ??? "


"கேளு. பண்ணுறது தப்பு,நினைப்பு மட்டும் சரியா இருந்தா என்ன? தப்பா இருந்தா என்ன? அருண்"


"இதுவரைக்கும் எத்தனையோ பேர பார்த்து இருப்ப எப்போவாச்சும் ஏன் இப்படி இருக்கிறோம்னு பீல் பண்ணி இருக்கியா. ஐ மீன் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?"


"இதில் என்ன புரியல இத்தனை பேர் கூட படுக்கிறேயே வெட்கமா இல்லையானு கேட்கிற அப்படி தான ??? "


"ஹே சாரி தமிழ் மன்னிச்சிடு நான் அப்படி சொல்ல வரல. உன் இடத்தில் இருந்து உன்னோட வலியை உணர முயற்சி பண்ணுறேன். அதுக்கு நீ என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சிக்க தான் கேட்டேன்"


" வேணா அருண்"


"........"


சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது. தேவை இல்லாமல் ஏன் இதை கேட்டோம் என்று நினைத்து கொண்டேன்.ஆனாலும் அவளுக்கு நிச்சயம் ஆறுதலை தந்து இருக்கும், அதுவே அவளுடைய எண்ணங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டால் இன்னும் அவளுக்கு நன்றாக இருக்கும் என்றே தோன்றியது. மௌனத்தை அவள் முடித்தாள்.


"அருண் என்னோட வயசு 21, அஞ்சு வருஷம் முன்ன இந்த தொழிலுக்கு வந்தேன்னு சொன்னேன். அப்போ பார்த்துக்க 16 வயசுல,எனக்கு என்ன தெரிஞ்சிருக்கும் அப்போ??? இல்ல இப்போ மட்டும் என்னத்த தெரிஞ்சிக்கிட்டேன் ??? ஆண்களின் அளவுகளும், எண்ணங்களும், வக்கிரங்களும், வாதைகளும் தான் தெரிஞ்சிருக்கு."

  

"...."


"சாரி உன்னை பற்றி சொல்ல வரலை,ஆனா இப்பவும் உன் மேல நம்பிக்கை இல்லை. ஐ மீன் ஜஸ்ட் என்னை நீ இம்ரஸ் பண்ண தான் நடிக்கிறியோனு தோணுது தப்பா நினைக்காத, ஏன்னா என் நிலை அப்படி அருண்"


"புரியுது தமிழ் "


"ஒவ்வொரு நாளும் எவன் கூடயாவது படுத்து,படுத்து, எதாச்சும் ஒரு நாள் தனியா இருக்கிறப்போ கூட துணை கேட்கும். அதே போல தினமும் எவன் கூடயாவது படுத்து இருக்கிறப்போ எதாச்சும் ஒரு நாள் தனியா இருக்க மாட்டோமான்னு தோணும். பாரு இது தான் எங்க வாழ்க்கை"


"என்ன சொல்லுறதுன்னு தெரியலபா "


"அதுவும் பீரியட் டைம்ஸ் இருக்கே ஐயோ நரக வேதனை. அதை எப்படி சொல்லுறதுன்னு தெரியல அருண் ..... வேதனையே அப்படின்னு இருக்கிறப்போ எந்த தேவுடியா பயலாவுது வந்து இவ தான் வேணும்னு டார்ச்சர் செஞ்சி புரிஞ்சிக்காம தெரிஞ்சே அழைச்சுட்டு போயிடுவான். அப்புறம்....."


" வேணாம் வேணாம் தமிழ் ப்ளீஸ் ...."


இந்தமுறை அவளின் அழுகை மிக சத்தமாக ஒலித்தது. என் மடியில் முகத்தை புதைத்து கொண்டு அழுகிறாள். அப்பொழுது தான் அவளின் முதுகை பார்க்கின்றேன், ஐயோ என்னது இப்படி இருக்கின்றதே????? என்னை கட்டுபடுத்த இயலாமல் கண்ணீர் வந்துவிட்டது. அப்பொழுது என்னுடைய இதயத்துடிப்பை உணர்ந்தது நான் மட்டும் அல்ல அவளும் தான். என் கண்ணீர் அவளின் முதுகை தொட்டதும் அவள் எழுந்து விட்டாள்.மீண்டும் தனித்து சென்று சுவர் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.


" அருண் சாரிபா நீயே சந்தோசமா இருக்க தானே வந்த நான் உன்னை டென்ஷன் ஆக்கிட்ட போல"


அவள் கேட்டது என்னவோ எனக்கு காதில் விழுந்தாலும், எனக்கு அவள் முதுகில் இருந்த காயமே தெரிகின்றது. வரி வரியாக சிவப்பு நிறத்தில் இரண்டு பக்கங்களிலும் இருந்தது. எப்படி அது உருவாகி இருக்கும். இந்த படத்தில் வரும் ட்டார்ச்சர் செக்ஸ் என்பது எல்லாம் உண்மையாவே இருக்கின்றதோ. அப்படி வக்கிரமான எண்ணத்துடன் இருப்பவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது ?. அனுபவிக்க தான் பெண் சுகம் என்பதெல்லாம் இவர்களிடத்தில் இல்லையோ. ஒரு பெண்ணை விலை கொடுத்து வாங்கி அவளை எப்படி துன்புறுத்த மனம் தோன்றுகிறது. அந்த தேவுடிய பசங்களுக்கு பெண்மையின் அர்த்தம் ஏன் விளங்காமல் போனது. விலை மாதுவாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ??? ஒரு நொடி அவள் நிலையில் இருந்து ஏன் யோசிக்க நினைப்பதில்லை??? இப்படி என்னுள் தோன்றிய காட்டமான எண்ணங்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற தோன்றியது.


"தமிழ் எனக்கு மனசு சரி இல்லை நான் கிளம்புறேன். நீ வருத்தபடுவது போல எதாவுது நான் நடந்து இருந்தால்.தயவு செய்து என்னை மன்னித்துவிடு தமிழ் ...!!! "


"அருண் ஏன் என்ன ஆச்சு ப்ளீஸ் போகாத "


"இல்ல தமிழ் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இங்க இருந்தா நான் அழுதிடுவேன்னு பயமா இருக்கு ப்ளீஸ்"


"அருண் நீ போனா எனக்கு தான் பிரச்சனை ப்ளீஸ் புரிஞ்சிக்க கஸ்டமரா விட்டுட்டேன்னு என்ன டார்ச்சர் பண்ணுவாங்க " கலங்குகிறாள் அழகு தமிழ்.


என்ன செய்வது என்ற யோசனையில் என்னிடம் இருந்த சிகிரெட் காலியானது. அவளிடம் அருகே சென்று அவளை பெட்டில் படுக்கவைத்து விட்டு.


" தமிழ் நான் போகவில்லை , நீ ரெஸ்ட் எடுத்துக்கோ ஜஸ்ட் நான் கடைக்கு போயிட்டு வரேன் ஓகே "


"நானும் வரேன் அருண் "


"வேணாம்பா சத்தியமா நான் போகமாட்டேன் நீ தூங்கு, நான் டிரிங் பண்ணபோறேன் ஸோ ஒன்லி சாரி "


"ஓகே இங்க வந்து சாப்பிடு ப்ளீஸ் வெளியவேணாம் "


"ஓகே உனக்காக "


அவளிடம் என்ன இனி பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. அவள் தூங்கிவிட்டால் போதும் என்றே தோன்றியது. இப்படியே சென்றுவிடலாமா என்று கூட நினைத்தேன், பாவாம் அவள் இதுவால் ஏதாவது பிரச்சனை வந்து இன்னும் கஷ்டபடுவாளே. மீண்டும் அறைக்கே சென்றேன் இம்முறை எப்பொழுதும் எனக்கு துணையாக இருக்கின்ற மதுவுடன். பின்னர் மதுவோடு நான்கு மணி நேரம் உரையாடி கொண்டு இருந்தேன். தமிழ் விளித்து விட்டாள். அருகே வந்து ஆதரவாக என்னை அணைத்தாள்.


"வா அருண் "


" வேணாம் தமிழ் மப்பு ஓவரா இருக்கு நா கிளம்பலாமா"


"அருண் நீ ஒன்னுமே செய்யலடா "


"ப்ளீஸ் என்னை கம்ப்பெல் பண்ணாத சாரி தமிழ்"


அவளிடத்திலும் எதுவும் வார்த்தை இன்றி கிளம்ப ஆயத்தமானாள். அவள் கையில் சில பணத்தாள்களை திணித்து விட்டு அவளிடம் இருந்து விடை பெற்றேன். அவள் மேல் இருந்த அன்பினால், மீண்டும் அவளை சந்திக்க கூடாது என்றே நினைத்து கொண்டு சென்றேன்.


ஆனால் 
சில நாட்களுக்கு பிறகு அவளை மீண்டும் சந்திக்க சென்றேன்."ஏன்டா உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாவே இல்லையாடா??? அரிக்கிதுனு போயிட்டு கதை கேட்டு பீல் ஆகி ஒன்னும் பண்ணலையாம், நீ சினிமா பார்த்து கெட்டு போனது நூற்றுக்கு  நூறு  உண்மை. ஓடிடு வாயில எதாச்சும் வந்துட போகுது"
நண்பர்களுக்கு இது போன்ற விஷயங்களில் கோபம் மடை திறந்த தண்ணீர் போல பீறிட்டு வருவது சகஜம் தானே. ஆனால் நான் மீண்டும் தமிழை நாளையே  காண போகிறேன் என்று இவனிடம் சொன்னால், ரணகள  சிரிப்பாய் தான் இருக்கும். காதலர்கள் எப்போதும் அவரவர்களை நினைத்து கொண்டு இருப்பார்கள் ஆனால் நான் ஏன் அவளை இப்பொழுது நினைத்து கொண்டு இருக்கின்றேன். நிச்சயம் எவன் கூடயாவது படுத்து கொண்டு தான் இருப்பாள், அதிலும் அங்கு நடக்கும் சம்பாஷணைகளில்  என்னை நினைப்பது என்பது அவளுக்கு சாத்தியமே இல்லை . அப்படியே வாய்ப்பு இருந்தாலும் என்னை நினைப்பாள் என்று எப்படி என்னால் நினைக்க முடிகின்றது. ஒருவேளை அவளும் என்னை போல தனிமையில் இருக்கும் பொழுது நினைப்பாளா? சுத்தம் அவளின் தனிமை அவளுக்கே போதாதே. நாளை காண போகும் தமிழின் நினைவுகள் ஏன் என்னை இப்படி கொள்கின்றது.
"தமிழ் எப்படி இருக்க ???"
"ஹே ஒரு மாசத்துல நீ ரெண்டாவுது டைம் வந்துருக்க"
"ஆமா உன்ன பார்க்காம இருக்க முடியல "
"நம்புறேன் அருண் எனக்கு உன் நினைப்பு ரொம்பவே இருந்துச்சு "
"ச்சும்மா சொல்லாத தமிழ், எனக்காக தான சொல்லுற ? "
"இல்லை அருண் இங்க வரவங்க நிறைய பேரு ஆனா அதுல உன்ன போல எங்களுக்காக நினைக்கிற ஆளுங்க ரொம்ப ரொம்ப கம்மி அதான் மறக்க முடியாது. "
" நான் ஒண்ணுமே பண்ணலையே தமிழ் "
" அதான்டா பண்ணுனவுங்களை விட பண்ணாதவுங்க தான் எங்க மனசுல இருப்பாங்க "
"மொக்க போடி "
இப்படி எங்களின் உணர்வுகளை வெளிபடுத்தி கொள்ள வேண்டும் என்று பேராவலுடன் சென்ற எனக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.
ஆம் தமிழ் அவ்விடத்தை விட்டு வேறு நாட்டுக்கு சென்று விட்டாள். பெரிய தொகைக்கு 60வயது உள்ள  வெளிநாட்டுகாரன் அவளை மொத்தமுமாக வாங்கிவிட்டானாம்.
அவள் சென்று 10 தினங்கள் தான் ஆகின்றது என்று கூறுகிறார்கள். அவள் மேல் அளவில்லா அன்பு மறந்து கோபம் கொள்கிறேன். என் கண்ணீர் என்னை கேட்காமல் வந்து கொண்டே இருக்கின்றது. நான் ஒரு கோளை போல என்று என் மனம் சிரிக்கின்றது. வேறு ஒரு பெண்ணை அனுபவித்து அவளின் நினைவை மறக்க மனம் ஓரத்தில் ஆசையை தூண்டுகின்றது. எதை நான் செய்ய போகிறேன்  என்று எனக்கே தெரியவில்லை?? போயும் போயும் ஒரு விபச்சாரிக்காக இப்படி கலங்குகிறேன் என்ற எண்ணத்தில் அடிபட்டு யோசித்தால்,  எனக்கென்று எந்தவொரு தனித்துவமும் இல்லை அவள் வாழ்க்கைக்கான வழி என்று அவள் தேர்ந்து எடுத்து விட்டாள். அதை நான் செய்து இருக்க வேண்டும் அவ்வாறு செய்யாமல் போனதால் மீண்டும் ஒரு முறை  நன்கு யோசித்து முடிவுக்கு வந்தேன் .

நானும் ஒரு சராசரி மனிதன் தான்.அதே போல என்னிடம்  இறுதிவரை  இதுவும்  ஒரு போலியான நினைவுகளாக இருக்கும்.

2 comments:

  1. உண்மையோ கற்பனையோ... எதுவாகினும் உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள்... :-) :-)

    but, தல... எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்... மூன்றாவது இந்த பத்தியிலும் சில பிழைகள்... //ஒன்னும்// //வெளிபடுத்தி// //கோளை//

    ReplyDelete
  2. நன்றி ப்ரோ கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன்

    ReplyDelete