Monday, 28 April 2014

நான் அஜித் ரசிகன்- 2

முந்தைய பகுதி

காட் பாதர் படம் படபிடிப்பில் இருந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இன்னுமொரு பரபரப்பான செய்தி வெளிவர தொடங்கியது நான் கடவுள் என்று பாலா இயக்கத்தில் அஜித் நடிக்க போகிறார் அதற்காக உடல் இளைத்து , முடி வளர்த்து கொண்டு இருக்கின்றார் என்று தினசரிகளில் பரபரத்தது. எங்களுக்கெல்லாம் இது போதும் பாலா படத்தில் நடித்தால் அது அஜித்தின் உச்சமாக இருக்கும் என்று நினைனைத்து கொண்டு ஆர்வமோடு விவாத்திப்போம்.


2005ல் கல்லூரி சேர்ந்தமையால் அங்கேயும் அஜித் என்ற நடிகருக்காக என் குரல் ஓங்கியே ஒலிக்கும் நண்பர்கள் மத்தியில். அப்போது தயாரிப்பாளர் பிரச்சனை என்றும் அஜித் பல நெருக்கடிகளுக்கு உள்ளான நேரம். அதுவரையில் அவரின் ஆதர்சன தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தான் பிரச்சனைகளுக்கு காரணம் என்று செய்தி வந்தது பல இடத்தில் இருந்து. இடையில் உடல் இளைத்த அஜித் வாசு இயக்கத்தில் நடித்த பரமசிவன் 2006 பொங்கல் வெளியீடு கண்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தை அவ்வாறு கண்டதே நிறைவு என்ற ரீதியில் தான் படம் இருந்தது.

2006 ஏப்ரல் திருப்பதி , பேரரசு இயக்கத்தில் வெளிவந்தது திருப்பாச்சி , சிவகாசி என்று வெற்றி படம் கொடுத்து இருந்தமையால் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படமும் பி & சி கிளாசில் நல்ல வெற்றி படமாக அமைந்தது. ஆனால் எனக்கு பிடிக்கவில்லை இத்திரைப்படம். இடையில் நான் கடவுள் திரைப்படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டார் , ஏகபட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் அஜித் அமைதியாக இருந்தது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தன் ரசிகர்களை வைத்து பகடைக்காயாக உருட்டுவோருக்கு மத்தியில் தன்னால் யாரும் துன்புற்ற கூடாது என்ற ரீதியில் அஜித் இருந்தது அவரின் மேல் அளவளாவிய பற்று கொள்ள தூண்டியது.


2006 தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த நேரம், நீண்ட சிக்கலுக்கு பிறகு வெளியீடு கண்டது காட் பாதர் இம்முறை வரி விளக்கிற்காக தமிழ் பெயரில் வரலாறு என்று. முதல் நாள் பள்ளி நண்பனுடன் தஞ்சை ஜுபிடெரில் முதல் காட்சி. படம் தொடங்கியதில் இருந்து பரபரப்பாக ஓடிக்கொண்டு இருந்தது இடைவேளை காட்சியில் மொத்த திரைஅரங்கமும் அதிர்ந்தது. இடைவேளை முடிந்து அடுத்த 15 நிமிடங்களில் இரண்டு அஜித் மோதிக்கொள்ளும் காட்சி அது , தன்னுடைய இருக்கையில் இருந்து ஒரு அஜித் எழும்போது திரைஅரங்கில் உள்ள 650 நபர்களும் எழுந்து  நின்று ஆர்பரித்த போது முதல் முறை எனக்கு மயிர்  கூச்செறிந்தது,   திரைப்படத்தை காணும் நிமிடத்தில்.நான் மேற்கூறிய காட்சி, இந்த லிங்கில் காணுங்கள்.


பின்னர் கல்லூரி சென்று அந்த நண்பர்களுடன் திருச்சி மெகா ஸ்டாரில் நாலு முறைக்கு மேல் கண்ட திரைப்படம். அவ்வருடத்தின் பிலிம் பேர் சிறந்த நடிகருக்கான விருது வரலாறு படத்திற்காக அஜித்திற்கு கிடைத்தது. அவ்வருடமே தொடங்கப்பட்ட விஜய் அவார்ட்ஸ்சில் ஆதர்ச நாயகன் விருதும் இப்படத்திற்காக அஜித் அவர்களுக்கே கிடைத்தது. இன்று வரை அது போன்ற மாஸ் & கிளாஸ்  அஜித் -கே.எஸ் .ஆர் கூட்டணி எதிர்பார்த்து கொண்டே இருக்கின்றனர் என்னை போலவே பல ரசிகர்கள்.

2007 பொங்கல், வெற்றிக்காக நான்கு வருடங்கள் காத்திருந்த அஜித் மற்றும் அவர் ரசிகர்களுக்கு வராலறு என்ற  மிக பெரிய வெற்றியை  கொடுத்து நான் கடவுள் என்ற படத்தில் இருந்து அஜித் விலகி பின் புதுமுக இயக்குனரின் படைப்பில் (ப்ளீஸ் திட்டிடாதீங்க) வெளிவந்த ஆழ்வார் மெகா  தோல்வியை  சந்தித்தது.அப்பொழுது உடன் வெளியான  போக்கிரி படமோ விஜய்க்கு இன்னுமொரு கில்லி வெற்றி போல அமைந்தது. அஜித்-விஜய் என்ற நேரடி  போட்டியில் இராண்டாம் முறை திருமலைக்கு பிறகு விஜய் அருமையான வெற்றி பெற்றார்.


2007 ஜூலை 7 , கிரீடம் வெளியானது மீண்டும் புதுமுக இயக்குனர் என்ற பயம் வேறு அதிகமாக இருந்தது ஆனால் என்னை மட்டும் என்று அல்லாமல் பெரும்பாலான ரசிகர்கள் பிளஸ் குடும்பங்களை இப்படம் கவர்ந்தது. இன்றைக்கும் சன் மியூசிக் , இசை அருவி என்ற மியூசிக் சேனல்களில் இப்படத்தின் பாடல் இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பாடல்கள் ஹிட் அடித்தது. இப்படத்தில் இடைவேளை சண்டை  காட்சி & கிளைமாக்ஸ் அஜித் நடிப்பில் இன்னுமொரு பரிமாணமாக இருந்தது.


2007 டிசம்பர் பில்லா வெளியீடு கண்ட மாதம் ,திருச்சி  டிசம்பர் 14 அதிகாலை டீ கடையில் தெரிந்தது பில்லா படத்தின் எதிர்பார்ப்பு. அந்தளவுக்கு முதல் முறை அஜித் படத்திற்கு எல்லாவிதமானவர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். எங்கள் கல்லூரி நண்பர்களுடன் திருச்சி கலையரங்கில் 25நபர்கள் ஒரே வரிசையில் கண்டு ஆராவரம் செய்த திரைப்படம் பில்லா. இந்த ஒரே படத்தின் மூலம் அஜித் கிராப் எங்கோ சென்று யாரும் மறுக்க முடியா உண்மை. ஆனால் இப்படத்திற்கு பிறகு தான் நடராஜா சர்வீஸ் என்று கூட கூறபடுகிறார் என்பது பொறாமையின் மிச்சமே.

2008 தீபாவளி ஏகன் இன்று வரை நாங்கள் ஒருபடத்திற்காக அதிகபட்ச்ச விலை கொடுத்து திருச்சியில்  பார்த்தது , ரம்பா திரைஅரங்கில் 250ரூபாய் முதல் நாள் முதல் காட்சி. அதிலும் ஒருசில நண்பர்கள் பின்னர் 350வரை கூட கொடுத்த வந்தனர். எல்லாம் பில்லா செய்த மாயம். இப்படம் கூட அஜித்தின் புது வகையான கதை தேடலை காட்டியது. தன்னுடைய நிஜ உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர் கதை தேடியது இப்படத்தில் தான் தொடங்கியது போல. ஆனால் இதுவும் ஒரு சராசரி படமாக தான் அமைந்தது. அதன் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு பிறகு வெளிவந்த அசல் திரைப்படம் கூட தோல்வியில் தான் முடிந்தது. இப்படி அஜித் தொடர்ந்து வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியாமலேயே முன்னணி நடிகராக இருந்து கொண்டது பலரை வியப்புக்கு உள்ளாக்கியது.2011,31 ஆகஸ்ட் மங்காத்தா , அஜித்தின் திரைவாழ்வில் மிக பெரிய திருப்புமுனை கொண்ட நாள். இதே போன்று காத்து இருந்து பெற்ற வெற்றி படங்கள் வில்லன் , வரலாறு , பில்லா போன்றவைகள் அப்படத்திலேயே முடிந்து போனது போல் இல்லாமல் இன்றுவரை தாக்கம் உள்ள திரைப்படம். இந்த காலகட்டத்தில் தான் அஜித் என்ற மனிதருக்கு உள்ள  உண்மையான கூட்டத்தை திரை உலகம் கண்டது. மன்றங்களை களைத்த பின்னர் இப்படத்திற்கு இவருக்கு கூடிய கூட்டம் வியப்பின் உச்சமானது அப்போது. சைதை ராஜ் திரைஅரங்கில் தான் ரசிக வெள்ளத்தில் கண்டேன் ரகளையாக.

பின்னர் வெளியான பில்லா 2 (2012) கூட தோல்வி படம் என்று கூறினாலும் அதற்க்கு கிடைத்த ஒபெநிங் எந்தஒரு படத்திற்கும் கிடைத்தது இல்லை என்பதே நிதர்சனம், சிங்கப்பூரில் நான் கண்ட முதல் அஜித் திரைப்படம். இங்கு கூட பல திரை அரங்குகளில் வெளிகண்ட வகையில் அதை உறுதி செய்தது.

இதோ இப்பொழுது தான் ஆரம்பம் & வீரம் என்று தொடர்ச்சியாக வெற்றி தந்து ரசிகர்களை சந்தோசத்தில் திளைக்க வைத்து இருக்கின்றார். இனி அடுத்து வரப்போகும் கௌதம் மேனன் படம் என்னவொரு எதிர்பார்ப்பில் இருக்கின்றது என்பதை சொல்லவா வேண்டும்.நான் அஜித் ரசிகன் , என்னவொரு நிலையிலும் எப்பொழுதும் நான் அஜித் ரசிகன். 

16 comments:

 1. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ....விரைவில் இணைந்து விடுகின்றேன்

   Delete
 2. Bro... Sema.. Always Ajith Fan.. Proud to be Ajith Fan..

  ReplyDelete
 3. நானும் அஜித் ரசிகன் தான்.. படங்களுக்காக மட்டுமல்ல, ஒரு நல்ல மனிதர் என்ற முறையிலும் ;)

  ReplyDelete
  Replies
  1. ஆமா தல நல்ல மனிதர் அப்புறம் தான் நடிகர். :)

   Delete
 4. ஏகபட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் அஜித் அமைதியாக இருந்தது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தன் ரசிகர்களை வைத்து பகடைக்காயாக உருட்டுவோருக்கு மத்தியில் தன்னால் யாரும் துன்புற்ற கூடாது என்ற ரீதியில் அஜித் இருந்தது அவரின் மேல் அளவளாவிய பற்று கொள்ள தூண்டியது.

  ReplyDelete
 5. ஏகபட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் அஜித் அமைதியாக இருந்தது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தன் ரசிகர்களை வைத்து பகடைக்காயாக உருட்டுவோருக்கு மத்தியில் தன்னால் யாரும் துன்புற்ற கூடாது என்ற ரீதியில் அஜித் இருந்தது அவரின் மேல் அளவளாவிய பற்று கொள்ள தூண்டியது.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா நண்பா இப்படி இருந்தது தான் அவருக்கு பல ரசிகர்களை பெற்று தந்து உள்ளது .... :)

   Delete
 6. வணக்கம் நண்பர்களே
  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete
 7. அருமையான பதிவு...
  அஜித் ஒரு நல்ல மனிதர்...
  உங்களது இந்த பதிவு படித்ததில் மிகுந்த மகிழ்ச்சி...
  மிக்க நன்றி...

  ReplyDelete