Thursday 29 August 2013

ஆதலால் காதல் செய்வீர் - திரைப்பாடம்



தினமும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் எப்படியாவது, காதலர்கள் பிரிந்தனர் , தற்கொலை , பிறந்த குழந்தை குப்பை தொட்டியில் என்று நம்ம கண்டே வருகிறோம் ,இதை போலவே பல நிகழ்வுகள் தெரிந்து நடந்தது , நடக்கிறது , இனியும் நடக்குமா என்று கேட்டால் ... ?

இந்த திரைப்படத்தை எல்லோருக்கும் கொண்டு சென்றால் தடுக்கலாம். ஏதேனும் வகையில் பாதிப்பின் விளைவுகளின் அளவு குறையும். எந்த ஒரு ஆர்ப்பட்டமும் இல்லாமல் கருத்து சொல்லுகிறேன் என்று திணிக்காமல் , மென்மையாக எல்லோரும் ஏற்று கொள்ளும் வகையில் மிக அருமையாக நமக்கு தந்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன். தமிழ் திரை உலகில் என்னை தவிர்க்க முடியாது என்று திடமாக நிருபித்து உள்ளார். 

பையன் தான் வீட்டை நன்கு ஏமாற்றுவர் என்று அதை மையபடுத்தியே பெருமன்மையான காட்சிகள் நம் திரைப்படங்களில் இடம் பெரும். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் இக்காலத்தில் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறாள் (பெற்றோரை காதலுக்காக ) என்று அப்பட்டமான உண்மைகளை காட்டி இருக்கிறார். 

எல்லோரின் நடிப்பிலும் இயக்குனரே தெரிகிறார் இருந்தும் ஜென்னி என்று ஸ்வேதாவின் தோழியாக வருபவர் மிக நன்றாக நடித்து இருப்பார். ஸ்வேதாவும் அப்படியே மிக அருமையாக பொருந்தி போகிறார்.

படத்தின் இறுதி 15 நிமிடங்கள் இன்றைய சமூகத்தின் உண்மை முகம். யுவனின் இசை உயிராய் இருக்கிறது, பாடல்கள் எப்படி எந்த இடத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல எடுத்துகாட்டு.

படத்தில் ஒரு காட்சியில் சும்மா போறவன் சொல்லுவான் "இந்தகாலத்து லவர்ஸ நாம பிரிக்க நினைக்ககூடாது அப்படியே விட்டா அவுங்களே பிரிஞ்சுடுவங்கனு "

அது தான் உண்மை ஆனால் ஆதலால் வரும் விளைவு படத்தின் முடிவு. பாலியல் கல்வி வேணாம் இந்த படத்த எல்லா மாணவர்களுக்கும் போட்டு காட்டுங்க அதுவே ஒரு நல்ல விதமாக இருக்கும். இல்லையேல் காதல் என்று இன்னும் கேவலமான நிகழ்வுகளை காண வேண்டும் வரும் காலங்களில்.

இப்படி ஒரு திரைப்படத்தை தந்த சுசீந்திரனுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். இது முழுக்க முழுக்க இயக்குனரின் திரைப்படம். கொண்டாட படவேண்டிய முக்கியமான பாதுகாக்க வேண்டிய திரைப்பாடம்.

ஆதலால் காதல் செய்வீர் -   

0 comments:

Post a Comment