Thursday 29 August 2013

கற்றது தமிழ் - தமிழ் M.A (பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் )



தமிழ்நாட்டில் குறிப்பாக பள்ளிகள் தொடங்கி கல்லூரிகள் தொடர்ந்து வேலையிடம் வரை இருக்கும் பாரபட்சம் என்னை பொருத்தவரை வேறு எங்கும் உலகில் காண முடியாது. இதை இந்த படத்துடன் ஏன் சம்மந்தபடுத்தி கூறுகிறேன் என்றால் இதன் சாராம்சம் இதிலே புதைந்து உள்ளது, ஆனால் இதை பற்றி மட்டுமா இந்த படம் பேசுகிறது நிச்சயம் இல்லை ஒரு நாலு அஞ்சு படங்களில் சொல்ல வேண்டிய மைய கருக்களை இந்த ஒரு படத்தின் மூலம் கொண்டு சேர்த்தது இயக்குனர் ராம் அவர்களின் வெற்றி, இந்த படம் வெற்றிய தோல்விய என்ற பேச்சுக்கே இடமில்லை ஒரு படம் மட்டும் எடுத்து விட்டு 6 வருடங்களாக எதிர்ப்பார்க்க வைத்துள்ளார் அடுத்த படத்திற்கு , இந்த படம் வந்த பொழுது எத்தனை எத்தனை கல்லூரிகளுக்கு உரை ஆற்ற அழைக்கபட்டார் அதுவே அவருக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி.

முதலில் இத்திரைப்படம் என்பார்வையில் எதையெல்லம் பற்றி பேசுகின்றது என்று பட்டியல்லிடுகின்றேன்

1. நடுத்தரவாசி தமிழ் படித்தால் ஒருவனின் நிலைமை எப்படி இருக்கும் ?

2. தமிழகத்தில் காவல்துறையினர் நினைத்தால் நடுத்தர வர்த்தக ஒருவனை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமா ?

3. அறியாத வயதில் உருவான நட்பு புரிந்த வயதில் காதலாகுமா அவர்களை ஒன்று சேர்க்குமா ? (இவை இயக்குனர் எடுத்துக்கொண்ட கமெர்சியல் திணிப்பு அதையும் மிக அற்ப்புதமாக கையாண்டு இருப்பார் )

4. தன்னுடைய சம்பளத்திற்காக தன் அடையாளங்களை அழித்துகொள்ளலாமா ?

5. கல்வி என்பதில் ஏன் இத்தனை பாரபட்சம் ?

நான் மேற்குறிப்பிட்டு உள்ள 5 கேள்விகளிலும் கிளை கேள்விகள் எத்தனனையோ அவைகளுக்கும் சேர்த்தே காட்சிகள் அமைக்க பட்டு இருக்கும். முதல் காட்சியிலேயே தமிழ் நாட்டில் தமிழ் படித்தவன் ஏன் எப்படி உயிர் வாழ முடியும் என்று பிரபாகரன் கேட்க்கும் பொழுதே படம் தமிழை பற்றி மட்டும் பேச போகிறது என்று நான் நினைக்க தொடங்கிய அடுத்த நொடியே காவல் துறையின் காமன் மேன் பார்வை எந்த அளவுக்கு செல்லும் என்று காட்சிகள் விரிவடைய நானும் இந்த படம் ஒரு விடயம் சார்ந்தது இல்லை என்ற முடிவுக்கு வந்தே காண தொடங்கினேன். முதல் அரை மணிநேரம் ஒவ்வரு காட்சியும் ரணகளம் போலவே சென்றது என் இதய துடிப்பின் சத்தம் என் காதுகளை அடைந்தது. அடுத்து சிறுவயது அத்தியாயம் முதல் 10நிமிடங்கள் கவிதை தொகுப்பு போல கொஞ்சம் மென்மையாக நிதானபடுத்தியதே என்று நினைக்குபோதே அடி நெஞ்சை பிசைந்து விட்டது அடுத்த காட்சி. இப்படியே படம் முழுக்க மென்மையும் ரணமும் ஆகா என்னை ஆட்கொண்டு சென்று விட்டது.
30 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் படித்தல் முக்கியம் என்று இருந்தது , பின் எதை படித்தல் முக்கியம் என்று ஆனது , இன்று இதை படித்தல் முக்கியம் என்று இருக்கிறது.

குறைந்தபட்ச்ச சம்பளம் 2000-4000 அன்று முதல் இன்றுவரை

அதிகபட்ச்ச சம்பளம் அன்று 20000 இன்று .....?????

இங்கே இந்த ஒரு புள்ளியில் உலகின் ஒட்டுமொத்த உலகமயமாக்குதல் என்று ஏன் இப்படி ஆனது என்ற ஆயிரம் கேள்வியை கேட்க்கின்றது .

30000 40000 சம்பளம் வாங்கிட்டு பண்ற அலப்பரை இருக்கு பாருங்க சார் என்று வரும் ஒரு வசனத்திற்கு அந்த சம்பளம் வாங்குபவனும் திரைஅரங்கில் கை தட்டியதே அதில் உள்ள உண்மை புரியும் நமக்கு.

படத்தில் இயக்குனர் அவர்கள் இது தான் முடிவு என்று எங்கும் கூறவே இல்லை இப்படி இருக்கு என்றும் ஏன் என்றும் தான் சமூக அக்கறை கேள்வியாகவே கேட்க்கிறார்? ஒரு முடிவை எதிர் பார்த்தாலே இந்த படம் உங்களை ஈர்ப்பது மிக கடினம். கதையில் பிரபாகரன் என்பவன் தான் தமிழ் படித்து இப்படி இருக்கிறேன் இந்த சமூகம் ஏன் இப்படி உள்ளது என்னுடைய கோபம் அதன் தாக்கமே இப்படி ஆனது என்று கூறிவிட்டு இதற்க்கு முடிவு நான் சொல்லவில்லை இப்படி இருக்கு என்று மட்டுமே கூறியது பலருக்கு பிடிப்பில்லாமல் போய்விட்டது போல பின் அவை எனக்கு இல்லை என்றாலும் என் ஆனந்தி என்னிடம் வந்து விட்டால் அதுபோதும் என்று அவன் போவதும் பின் உயிர் துறப்பதும். மனதை நெகிழ வைத்து விட்டது , நம் வாழ்கையிலே நம் விரும்பும் ஒன்று கிடைக்க வில்லை என்பதால் நாம் நேசிப்பதை விட முடியாது என்பது போலவே பிரபாகரனின் முடிவு அமைந்து இருக்கும்.

ஒரே கல்லூரியில் வேற வேற பிரிவில் படித்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் ஒருவன் மேலே ஒருவன் கீழே இது சரியா ?
அப்பொழுது கல்வியில் எந்த கல்வி சிறந்தது என்பது எதனால் வந்தது உலகமயமாக்குதல் , எதை நோக்கி உலகம் தேடுதோ அதை நோக்கி எல்லோரும் ஓடுவது நல்லதா ? இப்படி படம் முழுக்க விவாதமாகவே சென்றது இதன் சிறப்பு.

இந்த திரைப்படத்தின் வசனங்களை பற்றி பேசவேண்டும் என்றால் அதற்காக தனி பதிவு போட வேண்டும் , அந்த அளவிற்கு மிக அட்டகாசமாக அமைந்துஇருக்கும். ஒவ்வருமுறை கோபாத்தின் உச்சம் ஒருவனுக்கு வார்த்தையாக வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு மிக பொருத்தமாக அமைந்து போகும் இதன் வசனங்கள். ஒவ்வொன்றும் நம்மை எத்தனையோ முறை கேள்வி கேட்கும் படியாகவே அமைத்து இருப்பது இயக்குனரின் திறமை.

யுவன் இசையில் ஒரு அசாத்தியத்தை நிகழ்த்திய இடம் இந்த திரைப்படம் , பின்னணி இசை மிக பிரமாதமாக அமைத்து இருப்பார் , படம் பல களங்களை பற்றி பேசுவதால் இவரின் இசையும் மிக அருமையா புகுந்து விளையாடும். என்னை மிகவும் கவர்ந்த இப்படத்தின் சில பாடல்களை லின்க்கில் தருகிறேன் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=w5z8p4UrZM4
http://www.youtube.com/watch?v=RnZjqj7லாபி
http://www.youtube.com/watch?v=-wfpOW4kMv8

அடுத்து வரும் லிங்கில் வரும் காட்சியில் இறுதியில் சமூக ஆர்வலர்கள் கருத்து கேட்க்க பட்டு இருக்கும் , படத்திற்காக இல்லாமல் உண்மையாகவே கேட்டு எடுக்கப்பட்டது அதில் வரும் ஆர்வலர்கள் கூறும் கருத்தும் மற்றவர்கள் வைக்கும் கேள்வியும் அதுவே இந்த படத்தின் மற்றவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில்', என்னை மிகவும் கவர்ந்த காட்சி.

http://www.youtube.com/watch?v=Z3iLGMHrMO8

அழகம் பெருமாள் என்று தமிழ் ஆசிரியராக வந்து உணர்வு பூர்வமாக மிக சிறப்பாக வாழ்ந்து இருப்பார். புதுபேட்டைக்கு பிறகு அவரின் ஆக சிறந்த படம் இதுவே. அதுவும் இந்த பாடலில் அற்புதமாக பொருந்தி போகிருப்பர்.

http://www.youtube.com/watch?v=7fvMjuR1aCA

பிரபாகரன் என்ற அந்த பாத்திரப்படைப்பு அத்தனை நெஞ்சங்களிலும் அதிர்வை உண்டாக்கியது ஜீவா என்ற நடிகனுக்கு கிடைத்த பெருமை .

ஆனந்தியாக காட்சிகளில் நம்மையும் ஈர்க்க்வைத்து வேதனை படவைத்து , அதற்க்கு உயிர் கொடுத்து வாழ்ந்து இருப்பார் அஞ்சலி.

இயக்குனராக ராம் அவர்கள் என் நெஞ்சில் மிக பெரிய தாக்கத்தை உண்டாக்கினர் இந்த படத்தின் வாயிலாக , அவரிடம் மிக பெரிய நம்பிக்கை உள்ளது அவரின் படைப்புகளின் மேல், என்னை பொருத்தவரை இந்த கற்றது தமிழ் விவாதத்துக்கு உரிய சிறப்பு அம்சம் உள்ள அற்புத திரைப்படம். இன்னும்மொரு 30 வருடங்களுக்கு பிறகு இந்த படம் பற்றிய அப்போதைய பேச்சை நினைத்து பாருங்கள் இந்த படத்தின் வெற்றி அதில் உள்ளது.

0 comments:

Post a Comment