Thursday, 27 November 2014

இங்க காதலும் இருக்கு" மச்சான் சக்தி, உனக்கு தான் ஒன்னும் பேச வர மாட்டேங்குதே. அப்புறம் ஏன்டா மூச்ச போடுற "

"அப்படி இல்லைட கார்த்தி , எவ்வுளோ நாளு தான் இப்படியே பயந்துட்டு ஆசைய மட்டும் வச்சிட்டு இருக்கிறது"

"அப்போ நான் சொல்லுறது போல பண்ணு, ஆனா மயிரு எப்போவும் நான் ஒன்னு சொன்னா அதை அப்படியே முழுசா சொதப்பிட்டு வர "

"என்னடா செய்யுறது பயமா இருக்குடா , அப்படியே ஹார்ட் பீட் அடிக்கிறது எனக்கு கேட்கும் மச்சி!!! அவ பக்கத்துல இருக்குறப்போ "

" அது தான் மச்சி லவ்வு "

"லவ்வுலாம் இல்லை ஜஸ்ட் அவ என்ட்ட ஒரு நல்ல ப்ரெண்டா பழகினா போதும் மச்சி "

"இப்படி தான் ஆரம்பிக்கும் அப்புறம் நீயே சொல்லுவ பாரு "

"இல்லடா சில நேரம் அவ பேசுறது ரொம்ப க்ளோஸா வரது போல இருக்கும் , எப்படி சொல்லுறது ? ஹ்ம்ம் ... எப்படியும் மூணு நாலு மாசம் இருக்கும் தான அவள் கூட நான் வேலை பார்த்து கொண்டு இருப்பது? ஆரம்பத்துல ரொம்ப கேஷ்வுளா தான் பேசுனா மச்சி ஆனா, இப்போ அப்படி இல்லடா. "

"அடங்கப்பா உன் கதைய தான் தினமும் புலம்புறியே விடுடா , நாளைக்கு உன் ஆளு பிறந்தநாள், இப்போ நான் சொல்லுறது போல மெசேஜ் பண்ணு , நாளைக்கு உன்ன மீட் பண்ணனும்னு சொல்லு "

"அப்புறம்"

"ஓகே சொல்லிட்டா அவ்வுளோதான் மச்சி 80% கன்பார்ம் "

"எப்படிடா ஓகே சொல்லுவா இப்போ தான் முதல் தடவ "

"அப்படி இல்லடா, எப்போ அவ நீ தம் அடிக்குறத பார்த்து பீல் ஆகி உன்கிட்ட பேசாம இருந்தாளோ, அப்போவே அவளுக்கு உன் மேல ஒரு அக்கறை இருக்குடா. நீ கூப்பிடு அவ வருவா "

"சரிடா "

"ஆனா மச்சி ஈவினிங் கூப்பிடாத ஏன்னா அவளுக்கே லேட் டைம் தான் வொர்க் முடியும் ஸோ மார்னிங் வேலைக்கு போறதுக்கு முன்ன பார்க்கலாம்னு சொல்லு "

"ஆமாம் மச்சி சரி தான், அவ வரலைனாலும் என்னை தப்பா நினைச்சிட கூடாது "

"எல்லாம் சரியா வரும் , ஆனா மயிரு சரக்கு கேட்டா வாங்கி தர மாட்ட அவளுக்கு போயி இவ்வுளோ ரூபாய்க்கு கிப்ட்டு *ண்டை மட்டும் வாங்கு "

"அடிங்க *ண்டை தப்பா பேசுன கடுப்பாகிடுவேன்"

"போடா போடா கரெக்ட் பண்ணிட்டு பேசுடா "

"ஓடிடு கார்த்தி நான் அவள்ட பேச போறேன் "

"சரி சரி சீக்கிரம் பேசிட்டு படு அப்போ தான் காலைல ப்ரெஷ்ஷா போகலாம் "

சரி அவளுக்கு மெசேஜ் பண்ணுவோம் ஆண்டவா எப்படியாச்சும் அவ வரணும்,

"ஹாய் "

என்னடா டக்குனு ரிப்ளை வருது டேய் சக்தி கலக்குற

"ஹாய் என்ன பண்ற "

என்ன சொல்லலாம் ஹ்ம்ம் சரி தட்டி விடுவோம்.

"இல்லை அனு நீ தப்பா நினைக்கலனா ???"

என்னடா நேரா விஷயத்துக்கு போயிட்டோம் , ரிப்ளை பண்ண மாட்டாளோ...?? கிளிஞ்சது போ .... அட வந்துருச்சே

"என்ன சக்தி சொல்லு "

டே டே நல்லா யோசிச்சிக்க அவளே ஒரு வாய்ப்பு கொடுத்துட்டா

"அனு நாளைக்கு மார்னிங் ரெண்டு பேரும் ஒண்ணா ஆபிஸ் போகலாமா "

நடக்கிறது நடக்கட்டும் பார்த்திடுவோம் ,ஏதும் வரல ,குவாட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்திட வேண்டியது தான்.... அய்யயோ என்னமோ வந்துருக்கு திட்டி இருப்பாளோ ?????

"என்ன திடிர்னு தைரியம் வந்துடுச்சா "

அட ஆண்டவா என்ன பண்ணுறது ??? கார்த்தி கார்த்தி இங்க வாடா டே.. டே... எங்கடா போயி தொலைஞ்ச ???

"ஹா ஹா அப்படி இல்ல அனு"

அய்யயோ நான் என்ன பன்னுறதுனே தெரியலையே.

"ஓகே சக்தி நாளைக்கு நா வெயிட் பண்ணுறேன் நீ வா போகலாம் "

"தேங்க்ஸ் அனு நீ வெயிட் பண்ண வேணாம் , நான் தான் உனக்காக வெயிட் பண்ணுவேன் "

"ஹா ஹா போடா நான் தான் வெயிட் பண்ணுவேன் "

"அனு இப்போ நான் பறக்குறேன் தெரியுமா "

"ஹையோடா ,,, நாளைக்கு என்ன டே தெரியுமா ??? "

" ஹ்ம்ம் அதுக்காக தானே நாளைக்கு "

"ஹய் ரியலி "

"எஸ் அனு, கண்டிப்பா நாளைய நாளை நீ மறக்க மாட்ட "

"ஹ்ம்ம் மீ டூ வெயிட்டிங் சக்தி"

"ஓகே அனு டைம் எத்தனை "

"இதுக்கு மெசேஜா முடியல சக்தி "

"சொல்லு அனு ப்ளீஸ் "

"11.59"

"இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் என் இனிய அனுவிற்கு, இன்று நீ பெரும் வாழ்த்துக்களை போல என்றும் நீ வாழ்ந்திட வேண்டிக்கொள்கிறேன்"

"ஹே சக்தி thank you so much da      dear "

போடு இதை இதை தான் எதிர்பார்த்தேன். நான் அவள்ட லவ்வ சொல்லலை ஆனா கிட்டத்தட்ட சொல்லிட்டாளே அனு.

"டே கார்த்தி கார்த்தி இந்த கான்வேர்ஷேஷன பாரேன் ப்ளீஸ் மச்சி எந்திரிடா மாமா , புல் அடிப்போம்"

"என்னடா "

"ப்ளீஸ் பாரு மச்சி "

"ஹ்ம்ம் ...... டே மச்சி கலக்குற ...... அட ...... போடு வக்காளி ......ஹ்ம்ம் .... ரைட்டு அவ்வுளோதான் மச்சி, இனி நீ தான் டெவலப் பண்ணனும்"

" எப்படிடா "

"ஜஸ்ட் நாளைக்கு பேசுறப்போ ஈவினிங் படத்து கூப்பிடு "

" டே வருவாளா ??? "

"நீ கூப்பிடுடா கண்டிப்பா வருவா , எத்தனை பேர பார்த்து இருக்கேன் "

"ஹ்ம்ம் "

" படத்துக்கு வந்துட்டா பினிஷ் மச்சி ....மெதுவா டைம் பார்த்து அப்படியே அழகா கைய வச்சிடு "

"டே என்னடா சொல்லுற "

" ஆமாம் மச்சி நீ கைய வச்சிடு , அவ ஒன்னும் சொல்லலை அப்படியே என்ஜாய் பண்ணு ரூம் போட்டுறு, நீ ஒன்னும் செய்ய வேண்டாம் அவளே பார்த்துக்குவா "

"எப்படிடா சொல்லுற??? எனக்கும் ஆசையா தான் இப்போ இருக்கு மச்சி "

"அதான் பாயிண்ட் , கைய அவ தட்டி விட்டா டக்குனு எந்திரிச்சி வெளிய வந்திடு "

"ஏன்டா"

"அப்படியே ரூம்க்கு வந்துடு மச்சி , அவளே திரும்பவும் உன்ட வருவா அதான் பொண்ணு"

"என்னமோ சொல்லுற பார்ப்போம் "
***********************************************************************************************
"அனு என்ன பேஸ் புக்ல பெர்த் டே நாளைக்குன்னு வருது, உனக்கு தான் போன வாரம் முடிஞ்சதே "

"அதுவாடி ச்சும்மா "

"ஹே எவன்டி"

"விடு நாளைக்கு சொல்லுறேன்"

"ச்சும்மா சொல்லுப்பா "

" ஹே அவனே பழமாட்டம் இருக்கான் அதுக்கு தான் பிட் போட்டுருக்கேன்"

"ஹ்ம்ம் அப்போ அடுத்த விக்கெட் காலி"

"எங்க அவன் நமக்கு மேல இருந்தான்னா ???"

"அனு நீ கவ்வுத்துடுவடி அவன "

"பார்ப்போம் பார்ப்போம் குட் நைட் "

1 comment: