Saturday, 21 December 2013

பிரியாணி- வெங்கட் பிரபு டயட்

எப்பொழுதுமே வெங்கட்பிரபு படம் என்றாலே எனக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு அதை நான் எப்பொழுதுமே நான் விரும்புவேன் , எப்படியும் கண்டுவிடுவேன் கோவா உள்பட எனக்கு பிடித்ததே ஆனால் அதில் ஓரு சூட்சமம் உள்ளது அதை இப்படத்தில் தான் உணர்ந்தேன் அதை உங்களுக்கு இறுதியில் கூறுகிறேன்.அப்படி ஒரு ஆர்வத்தில் இன்று மதியம் 12.00 மணி காட்சி காண சென்றேன் பிரியாணி ஆனால் நான் சென்று டிக்கெட் எடுக்கையில் யாரும் முன் இல்லை அதனால் என்றென்றும் புன்னகை போங்க அப்படின்னு டிக்கெட் கொடுப்பவரு சொல்ல வேற வலி இல்லாம அதை எடுத்து வர, ஒரு ஜோடி கண்ணுல தென்பட கேட்டா பிரியாணி அப்படின்னு சொன

Friday, 22 November 2013

இரண்டாம் உலகம் - தமிழ் சினிமாவின் புது உலகம்

முன்குறிப்பு : இதுவரை நான் எழுதுவதை (கொஞ்ச நாளா தான்) தொடர்ந்து படித்து வர நண்பர்களுக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கும் , இயக்குனர் செல்வராகவனின் விசிறி நான்  என்பது ஆனால் இப்பொழுது அவரின் இரண்டாம் உலகம் என்ற திரைப்படத்தை பற்றி கூறும் பொழுது இதை விமர்சனம் என்று நினைக்காமல் முழுக்க முழுக்க என் பார்வையில் இரண்டாம் உலகம்  திரைப்படத்தின்  என்னுடைய கருத்து என்றே கூறிவிடுகிறேன். இரண்டாம் உலகம் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை வைத்து தான் காண சென்றேன்  ஆனால் நேற்று இரவு முதல் இன்று மலை வரை விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருந்தது , அதி

Monday, 11 November 2013

முன்னோட்டம் என் பார்வையில் இரண்டாம் உலகம்

திரைப்படத்தின் முன்னோட்டம் என்று கூறுவதைவிட வரபோகும் படத்தின் என் கருத்து என்று கூறிவிடுகிறேன், பரிசோதனை முயற்சி என்பதை முயற்சியாக மேற்கொள்ளாமல் அதை ஒரு கலையாகவே மேற்கொண்டு அதை வெற்றி தோல்வி என்று அடிப்படை ஏதும் இல்லாமல் ஒரு விவாத தலைப்பாக ஏற்படுத்தும் இயக்குனர் செல்வராகவன், அடுத்து நமக்கு  தரகூடிய தலைப்பு  இரண்டாம் உலகம். இரண்டாம் உலகம் இப்படத்திற்காக செல்வராகவன் குறைந்தது மூன்று வருடங்களுக்கு மேல் மெனகெட்டு சிற்பியாக இப்படத்தை செதுக்கியது அனைவரும் அறிந்ததே. ஆயிரத்தில் ஒருவன் என்று தற்காலத்தில் தமிழ் சினிமாவில் பாண்டஸி , நம் வர

Sunday, 20 October 2013

முதல் முயற்சியும் என்னுடைய தேர்வும் -1

எப்பொழுதும்  நான் நினைக்கும் & எதிர்பார்க்கும்  ஒரு படம் வெளியாகி அதை குறைந்தது 3 நாட்களுக்குள் எப்படியாவது பார்த்தால் தான், என் மனம் நிம்மதி அடையும் , அதற்காக எந்த ஒரு படத்தையும் என்று கூற முடியாது வெளியாகும் படங்களின் தன்மைகளை பொருத்து  அமையும்.  வெளியாகும் முன் தமிழ் திரைப்படங்களை என்னளவில்  ஒரு மதிப்பீடு செய்து கொள்ள முடியும், அது அந்த படங்களின் தொழில்நுட்பம் புரியும் நபர்களை முதன்மையாக கொண்டு முக்கியமாக இயக்குனரின் முன் வெளியான படங்களை கண்டு. ஆனால் இவைகளை தாண்டி புதிய படைப்புகளில் அதை வரவேற்க மிகவும் ஆர்வம்

Tuesday, 15 October 2013

சுட்ட கதை - முன்னோட்டம் என் பார்வையில்

பெரும்பாலும் இந்த வருடத்தில்  கலை ரசிகர்களை வெறுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது திரைப்படங்களின் வருகைகள் ஆகஸ்ட் மாதம் வரையில் அதன் பிறகு ஆகஸ்ட் 15 அன்று வெளியான ஆதலால் காதல் செய்வீர் முதல் தங்கமீன்கள் , 6 மெழுகுவர்த்திகள் , மூடர் கூடம் , ஓநாயும் ஆடுகுட்டியும் என்று எதிர் விமர்சனகளை விஞ்சி வசூலில் இவைகளில் சில வெற்றி பெற்றும்  பெரும்பாலனோர் நெஞ்சில் பதிந்தது இப்படங்கள் அந்த வரிசையில் அப்பொழுதே ஆகஸ்ட் மாதமே வெளிவரவேண்டிய இப்படமும் பெரும் இடையுறுக்கு பிறகு வரும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகின்றது. "சுட்ட கதை" . ஒரே வாரம் அக்டோ

Sunday, 13 October 2013

"க்ராவிடி" (GRAVITY) - சாகச அனுபவம்

போனவாரம் வெளியான ரெண்டு தமிழ் படமும் (வணக்கம் சென்னை & நய்யாண்டி ) வெளியாவதற்கு முன்னேயே அதை பற்றிய என் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்தது இப்பொழுது வெளியானதுக்கு பிறகு, ஆனா அதுலையும் வணக்கம் சென்னை வம்படியாக போகி மொக்கை வாங்குனேன். அந்த சோகத்த எப்படிடா போக்குறதுனு நினைச்சிட்டு இருந்தப்போ, நாமலும் ரெம்ப நாள் ஆச்சு திரைஅரங்கில் ஹாலிவுட் படம் பார்த்து , இங்கையும் சில நண்பர்கள் சொல்லிடே இருந்தாங்க கடந்த இரண்டு வாரமாக படம் மிக அருமையாக இருக்குது பாருங்க என்று,  அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம குழு (https://www.facebook.com/groups/ThirstForC

Thursday, 10 October 2013

இவரின் படங்களில் கற்றேன் பல

கல்லூரி வாழ்க்கை ஓவ்வொரு மாணவர்களுக்கும் அது போல் ஒரு ஆனந்தமான சூழல் வாழ்வில் கிடைப்பது மிகவும் அரிது, தன்னுடைய முழுமையான தேடலை தொடங்கும் காலம் அதில் பலர் வெற்றி தோல்வி என்று அடைந்தாலும் எல்லோரும் நிச்சயம் பெறுவது வாழ்க்கைக்கான மிக பெரிய பாடம் அனுபவம் , அந்த அனுபவ  சூழலே பின் வரும்  மிக பெரிய இடையூறுகளை எளிதாக கையாள கற்று தந்து இருக்கும். அந்த அனுபவம் உன்னாலும் உனக்கு கிடைக்கும் , உன் நண்பனாலும் உனக்கு கிடைக்கும் ,  உன் வாசிப்பாலும் உனக்கு  கிடைக்கும் , நண்பர்களோடு நீ செல்லும் திரைபடங்களாலும் கிடைக்கும். இவைகளின் அனுபவங்கள

Friday, 4 October 2013

முதல் முறை என்னை ரசிக்கவும் வியக்கவும் வைத்த இயக்குனர்

நம் தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் அவரவர் காலங்களில் பெரும் புகழும் பெயர்களையும் எடுத்து பலருக்கு முன் உதாரணமாக இருந்து உள்ளனர் அவரவர் காலங்களில் உள்ள இளைஞர்களுக்கு  திரைப்பட காதலர்களுக்கு ஆதர்ச இயக்குனர்களாக இருந்து பலரின் நெஞ்சங்களில் இடம் பெற்று உள்ளனர். அப்படி என் பள்ளியில் நான் 11வது  (2003ல்) படிக்கும் பொழுது என்னை முதல் முறை இயக்குனராக அவரின் முதல் படைப்பே  அத்தனை ஒரு ஆனந்தம் கொண்டாட்டம் பரவசம் ஏற்படுத்தியது. நானும் முதல் முறை ஒரு இயக்குனரை என் விருப்பமாக தேர்ந்து எடுத்து அவரின் அடுத்த அடுத்த படங்களை எதிர்நோக்கின

Thursday, 3 October 2013

இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா

இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா - எவுளோ பெரிய பேரு எழுதவே அவ்வளோ நேரம் ஆகுது, எல்லாரும் விஜய்சேதுபதி படம் என்று பெரிய வரவேற்ப்பு கொடுக்க , அவரும் இதுவரை இயக்குனரின் நாயகனாகவே வெளிப்பட்டு கொண்டு இருக்க, ஸ்டுடியோ 9 வெளியிடும் படங்கள் வேறு தேர்ந்து எடுத்து வந்து கொண்டு இருப்பதாலும் , ரௌத்திரம் பட இயக்குனர் என்பதில் மட்டும் கொஞ்சம் பயந்துட்டே தான் நேற்று படத்துக்கு போனேன். விஜய்சேதுபதி வழக்கம் போல வேறு ஒரு புதியமுகமாக இதில் தெரிகிறார் , அது தான் அவருடைய மிகபெரிய ப்ளஸ். ஒரு காட்சியில் கூட அவரின் முந்தைய படங்கள் நினைவில் வரவில்லை. சும்மார்

Sunday, 29 September 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - நேர்மையான திரைப்படம்

தன்னுடைய முதல்படம் தொடங்கி இன்றுவரையில் அவரின் அனைத்து 6 திரைப்படங்களிலும் (முகமூடியிலும்) தன்னுடைய தனித்துவத்தை தெளிவாக விளக்கியுள்ளார் , அவரின் கிளிஷேக்கள் கிண்டல் அடிக்கபட்டாலும் அதை தவிர்க்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றார். இயக்குனர் என்று ஒரு குழுவின் தலைவனாக திரைப்படத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் தன்னுடைய பங்களிப்பை செலுத்தி , பாமரனுக்கும் இது மிஷ்கின் படம்பா என்று சொல்லாமல் புரியவைத்தது உள்ளார்.  இவரின் இருளுலக  படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. அப்படி ஒரு எதிர்பார்ப்பில் தான் "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" திரைப்படத

Saturday, 14 September 2013

மூடர்கூடம் - புதியமுயற்சி நல்ல முயற்சி

இத்திரைப்படத்தை பற்றி கூறுவதற்கு முன் இன்று  நான் இத்திரைப்படத்தை காண சென்ற திரைஅரங்கில் நடந்த சுவாரசியமான நிகழ்வை கூர் வேண்டும் , வேலை முடிந்து 12 மணி காலை காட்சிக்கு என் பணியிடம் அருகில் உள்ள கோல்டன்  திரைஅரங்குக்கு  சென்றேன் (சிங்கப்பூரில் ரெக்ஸ் சினிமாஸ் & கோல்டன் டிஜிட்டல் இந்த இரண்டு மல்டி திரையரங்குகளில் மட்டுமே எப்பொழுதும் தமிழ் படம் வெளியிடு காணும், சில பல பெரிய படங்கள் நிறைய பெரிய திரையரங்கில் வெளியாகும் ).  மூடர் கூடம் வெளியாகி இருந்தது , தங்கமீன்கள் 15 நாட்களை தாண்டியும் ஓடி கொண்டு இருக்கின்றது எனக்கு ஆச்ச

Friday, 13 September 2013

அழிவை நோக்கி செல்லும் திரைப்பயணம் - தடுத்திடுவோம்

அழிவை நோக்கி செல்லும் திரைப்பயணம் - தடுத்திடுவோம்  * கலை என்பது ரசனைகளின் பல  விதங்கள் என்று அறிப்பட்ட நமக்கு இன்றைய நாட்களில் காண்பது  நகைச்சுவை என்ற ஒன்றின் படியிலே நின்று கொண்டும் , அதை தாண்டி செல்ல நினைப்போருக்கும் பெரும் முட்டுகட்டையாய் இருக்கின்றார்கள் , வரவேற்க வேண்டியவர்களே. *அரசியல் சூழலும் கலை துறையை கீழ் இறக்கம் செய்து கொண்டு இருக்கின்றது , கட்டுப்பாடு என்ற போர்வையில்.  * சென்சார்  என்ற  அமைப்பு பல இயக்குனர்களின் சிந்தனையை சுருக்கும் வேலையை மிக கச்சிதமாக செய்து கொண்டு இருக்கின்றது , அரசியல் தலையீடு

Saturday, 7 September 2013

6 (மெழுகுவர்த்திகள்) - திருப்புமுனை ஆகா வேண்டும்

  தற்பொழுதைய தமிழ் திரைஉலகில் எந்தவொரு வித்தியாசமான படைப்பையும் எளிதாக எடுக்கவும் முடியவில்லை , அப்படியே வெளியே வந்தாலும் , ஆதரவும் விமர்சனமும் ஒன்றாகவே இருந்தும் அந்த படத்தை முற்றிலும் ஒழிக்கவே படு படுகின்றனர் . இவைகளை தாண்டியும் பெரும்பான்மை மக்கள் வெற்றியும் பெற வைக்கின்றனர் அதற்க்கு சாட்சி ஆதலால் காதல் செய்வீர் & தங்கமீன்கள்.ஒரு படைப்பாளி தன்னுடைய முயற்சியை  சிறிதும் குறைத்துக்கொள்ளாமல் சொல்ல விரும்பியதை சொல்லி அவர்களுக்கு என்று பெரிய ரசிகர்களை உருவாக்கிவிட்டனர் ராம் மற்றும் சுசீந்திரன் . இவர்களை போலவே இயக்குனர் துரை நீண

Monday, 2 September 2013

யதார்த்தம் மீறியவையா இவைகள் ???

இப்பொழுது சமீபமாக பலராலும் யதார்த்த சினிமாக்கள் கேலிக்கு உள்ளாக்கபடுகிறது சென்ற வாரம் வெளியான தங்க மீன்கள் மற்றும் அதற்க்கு முன் வெளியான ஆதலால் காதல் செய்வீர் , இந்த திரைப்படங்களை முன்னிலைப்படுத்தியே கூறப்படுகின்றன. ஆதலால் காதல் செய்வீர் - இன்றைய இளையோரின் காதல் இறுதி வரை நீடிக்கின்றதா இல்லைஎன்றால் அதனால் ஏற்படும் விளைவுகள். இந்த கதை களத்தில் இயக்குனர் கூறிய உண்மையை ஏற்று கொள்ள முடியாமல் , அவரவர் கூறும் எதிர்  கருத்துக்கள் , "யாருப்பா இப்போலாம் இப்படி பண்றா அவனவன் காண்டம் போட்டுட்டு பக்காவா செய்யுரானுங்க" "அட காண்டம் போட சொல்லுரார்