Thursday, 3 October 2013

இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா

இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா -

எவுளோ பெரிய பேரு எழுதவே அவ்வளோ நேரம் ஆகுது, எல்லாரும் விஜய்சேதுபதி படம் என்று பெரிய வரவேற்ப்பு கொடுக்க , அவரும் இதுவரை இயக்குனரின் நாயகனாகவே வெளிப்பட்டு கொண்டு இருக்க, ஸ்டுடியோ 9 வெளியிடும் படங்கள் வேறு தேர்ந்து எடுத்து வந்து கொண்டு இருப்பதாலும் , ரௌத்திரம் பட இயக்குனர் என்பதில் மட்டும் கொஞ்சம் பயந்துட்டே தான் நேற்று படத்துக்கு போனேன்.


விஜய்சேதுபதி வழக்கம் போல வேறு ஒரு புதியமுகமாக இதில் தெரிகிறார் , அது தான் அவருடைய மிகபெரிய ப்ளஸ். ஒரு காட்சியில் கூட அவரின் முந்தைய படங்கள் நினைவில் வரவில்லை. சும்மார் மூஞ்சி குமாரு என்று புகுந்து லந்து பண்ணி இருக்கார் அவர் வருகின்ற அனைத்து காட்சிகளுக்கும் , பேசுகின்ற அனைத்து வசனங்களுக்கும்  விசில் பறக்கின்றது. நிச்சயம்  இவரின் அடுத்த அடுத்த படங்களும் பெரும் வரவேற்ப்பு இருக்க தான் போகின்றது.

பசுபதி (அண்ணாச்சி ) நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது முதல் பாதியில் வி.சே வுடன் சேர்ந்து கொண்டு கல கலக்குகிறார் ஆனால் இரண்டாம் பாதியில் ஒப்புக்கு கூட ஒரு காட்சியில்  இல்லை.

நந்திதா குமுதவாக கிறங்கடிக்க வைக்கிறார் சுமார் மூஞ்சி குமாரை , அந்த பாத்திரத்துக்கு ஏற்ப அளவாக நடித்து உள்ளார் ஆனால் ஒரே விதமான பாவனைகள் தான் படம் முழுக்க இவரிடம். குமுதா ஹாப்பி தான்பா


பாலா - சுவாதி இவர்கள் ஜோடியாக தனி ட்ராக்கில் ஓடிக்கொண்டு இருக்கும் , அவ்வப்போது இவர்களின் பகுதியில் வரும் பாஸ்கரின்   காட்சிகள் தள்ளி கொண்டு இவர்களை கரை சேர்க்கும், ஆனால் இரண்டாம் பாதி இவர்களுக்காகவே கதை நகரும். சுப்ரமணியபுரம் சுவாதியா இது என்று சில காட்சிகளில் வியக்க வைத்தார் , பாலாவின் குடி அரட்டைகள் போர் ராகம்.

சிலநேரமே வந்தாலும் செம்மையா ஸ்கோர் பண்ணிருக்கார் சூரி , எத்தனை எத்தனை எக்ஸ்ப்ரஷன்ஸ் , கண்டிப்பா இவரோட போர்ஷன் சிரிக்காம இருக்க முடியாது குறிப்பா இஷ்க் இஷ்க் ஷாஆஆஆஆஆ  அந்த காட்சி அப்டி தான் இருக்கும்.

படத்தின் இடைவேளைவரை கொஞ்சம் அலுப்பாகவும் ஒரு சில காட்சிகள் நீளமாவும் போய்ட்டு இருந்துச்சு , விஜய் சேதுபதி வர காட்சிகள் நிம்மதியா கடத்திட்டு போச்சு ஆனா அப்புறம் இடைவேளைக்கு பிறகு படம் பறக்க ஆரம்பிச்சிடுச்சு வரவன் போறவன் எல்லாம் சிரிக்க வைக்குறாங்க. எத்தனையோ காமெடி படம்னு நம்ம கழுத்த அறுக்குற படைகளுக்கு மத்தியில் மூடர் கூடம் , இந்த படம் போல யாரும் எடுக்க மாட்டேன்குறாங்க.

படத்தில் வரும் சென்னை பாஷை வசனங்கள் மிக அருமை, குமாரு நண்பர் என்று ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக வருபவர் இரண்டாம் பாதியில் ஒரு 30 தடவையாச்சும் கூறி இருப்பார் " ஹே குமாருக்கு லவ் ப்ராப்ளம் அப்செட்டா இருக்காரு ஆப் அடிச்சா கூல் ஆய்டுவாறு " இதை ஒவ்வரு முறையும் சிரிக்கலாம் சிலருக்கு அலுப்பாகும்.

இந்த படத்தில் சிரிப்பதற்கு எல்லோரின் உடல் மொழி தான் முக்கிய காரணம் , அவரவரின் செய்கைகளில் வட்டார பேச்சுகளில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் கடைசி 15நிமிடங்கள் விஜய்சேதுபதியின் அட்டகாசம் அதகளம் செய்து உள்ளார் . படம் முடிந்து வெளியே வந்தாலும் அவை நினைவில் வந்து வந்து சிரிக்கவைக்கும்.

எல்லாத்துக்கும் மேல இப்படத்தின் மூலம் இயக்குனர் கோகுல்  நல்ல கருத்தை எல்லோரும் ஏற்று கொள்ளும் படி தந்து உள்ளார்.

SAY NO TO DRINK

 நம்பி போகலாம் பேரு  தாங்க சுமார் மூஞ்சி குமாரு ஆனா பார்க்க நல்லாவே இருக்கார்பா 

2 comments:

 1. தல,

  கதையவே சொல்லாம செம்மயா விமர்சனம் பண்ணிருக்கீங்க..!! சூப்பரு..!! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. படம் இங்கே ஒரே ஒரு தியேட்டர்ல தான் ரிலீசு.. இந்த வீக்எண்ட் தான் போகனும்.. போய்ட்டு வந்து சொல்றேன்..!!

  அப்பறம் தல, ஒரு சின்ன சஜஸன்.. கீழ "ப்ளாக்ரோல்" விட்ஜட்ல டைட்டில் "HTTP://HOLLYWOODRAJ.BLOGSPOT.SG/"னு இருக்கு பாருங்க.. அத மாத்தி "BlogRoll" or "BlogList"னு வைங்க..!! நண்பர் ராஜோட ப்ளாக், உள்ளே ஆட் பண்ணறதுக்கு பதிலா, டைட்டிலா மாத்தி வச்சுட்டீங்கனு நினைக்கறேன்.. சரி பண்ணிருங்கோ...

  ReplyDelete
 2. நண்பா ரெம்ப நம்பி போகாதீங்க லைட்டா சும்மா டைம் பாஸ்க்கு போங்க படம் பிடிக்கும் ,
  அப்புறம் அதை ட்ரை பண்ணுறேன் நன்றிகள் :)

  ReplyDelete