Wednesday 8 January 2014

வீரம் - ஜில்லா---------- அஜித் - விஜய் ------- தல- தளபதி

தல அஜித் - தளபதி விஜய் இவர்களின் படங்கள் வெளியாகுது என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது ரசிகர்களிடம். இதுவரையில் இவர்களின் படங்கள் ஒன்றாக வெளிவந்த படங்களை  பற்றி ஒரு சிறிய பார்வையே மற்றும் சில வருடங்களுக்கு பிறகு தற்பொழுது வெளியாக போகும்  இருவரின் வீரம்-ஜில்லா படங்களின் முன்னோட்டமும் சேர்ந்ததே இப்பதிவு. 

வான்மதி - கோயம்புத்தூர் மாப்பிள்ளை (1996)


இப்படங்கள் வெளிவந்த சமயத்தில் விஜய் அவர்கள் நல்ல அறிமுகத்தோடு இருந்து இருப்பார். ஆனால் அஜித் அறிமுகம் கிடைத்து விடாதா என்றே முயற்சி செய்து கொண்டு இருந்து இருப்பார். இப்படங்களின் வெற்றி தோல்வி என்பதை விட வான்மதி படத்தில் வரும் "பிள்ளையார்பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா" என்ற  பாடல் இன்றும் விநாயகர் கோவில்களில் ஒலிப்பதை மறுக்க முடியாது. அதே போல கோ.மாவில் விஜய்-கவுண்டர் காமெடி நன்கு எடுபட்டது தெரியும். இன்றும் கூட ரசிக்க முடியும்.இப்படங்களுக்கு பிறகு சில நாட்களிலேயே வெளி வந்த பூவே உனக்காக மிக பெரிய வெற்றி பெற்று விஜய் என்ற நடிகரை பட்டி தொட்டி எங்கும் அறியவைத்தது. பின் இவ்வருடத்திலேயே நடுபகுதியில் வெளிவந்த ஆசை படமும் அஜித்திற்கு மிக பெரிய வெற்றியையும் அதுவரையில் அரவிந்த் சாமி போல மாப்பிள்ளை பார்த்த நம் தமிழ்நாடு அஜித் போல மாப்பிள்ளை வேணும் என்று சொல்ல தொடங்கியது.ஆக இருவரும் 1996ல் வெற்றி பெற்று நாயகர்களாக வர தொடங்கிவிட்டனர்.

நிலவே வா - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்(1998)


ரொமாண்டிக் ஹீரோ என்ற அந்தஸ்த்துடன் விஜய் வளம் வந்து கொண்டு இருந்த சமயம். பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை, ஒன்ஸ் மோர் என்று ஹிட்களை கொடுத்து நல்ல அடித்தளமிட்டு கொண்டு இருந்தவருக்கு நிலவே வா தோல்வி படமாகவே அமைந்தாது ஆனால் பாடல்கள் இன்றும் கேட்டால் நன்றாக இருக்கும்.ஆனால் அஜித் ஆசை படத்திற்கு பிறகு தேசிய விருது பெற்ற காதல் கோட்டை  நல்ல வெற்றி படமாக அமைந்தாலும் தனித்துவமாக  சொல்லிக் கொள்வது போல் வெற்றி படங்கள் ஏதும் இல்லாமல் அவரேஜ் படங்களாக  தந்து கொண்டு இருந்தார். அப்படி கிடைக்கின்ற படங்களில் எல்லாம் நடித்தாலும் விக்ரமன் அவர்களின் நட்பில் கெஸ்ட் ரோல் (அமெரிக்க மாப்பிள்ளையாக) நடித்த படமே உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் , படம் பெரிய வெற்றி தான் ஆனால் என்ன பயன் அஜித்திற்கு. காதல் மன்னன் வெளி வந்து நல்ல யூத் அப்ரோச் இருந்தபொழுது பின் வந்த இப்படம் கொஞ்சம் வருத்தமாக தான் இருந்து இருக்கும்.(அஜித் அவர்களை பாடல்கள் மூலமாக ரசிக்க தொடங்கிய காலம் இவ்வருடம் 1998 தான் காதல் மன்னன் பாடல்கள் பட்டைய கிளப்பியது எஸ்.பி.பி குரலில் ஆனால் விஜய் நல்ல காதல் அம்சம் உள்ள வெற்றி படங்களாக தொடர்ந்து ஹிட் கொடுத்து கொண்டே இருந்தார்)


தீனா-ப்ரெண்ட்ஸ் (2001)


ரஜினி-கமல் அடுத்து  அஜித்-விஜய் என்று பேச்சு துவங்கிய நேரம், காதல் படங்களின் நாயகனாகவே வெற்றி தந்தும் அதையே தொடர்ந்து கொண்டு  இருந்தார் விஜய் அப்படி காதலும் , நட்பும் என்று செண்டிமெண்டோடு நகைச்சுவை  பெரிதும் இடம் பெற்று வெளிவந்த ப்ரெண்ட்ஸ் மிக பெரிய வெற்றி பெற்றது அதிலும் வடிவேலு காமெடி பெரும் பங்காற்றியது. அஜித் அவர்கள் அமர்க்களம் படத்தின் வெற்றி மூலமாக ஆக்ஸன் படங்களில் அடிவைக்க தொடங்கினாலும் தீனா படம் தான் அவரை மாஸ் ஹீரோவாக கொண்டு சென்றது காதல் மன்னன் அஜித் தல அஜித் ஆனார். அஜித் படத்தில் அணிந்து வரும் தேள் பொருத்திய செயின் சாலையில் செல்லும் பெரும்பாலான இளையோரின் கழுத்தில் காண முடிந்தது. அதகளம் புரிந்து கொண்டு இருப்போர்கள் அஜித் ரசிகர்கள் என்று கூறுவதை மறுக்க முடியாது அப்பொழுது.

வில்லன் -பகவதி (2002)


அஜித் அவர்கள்  வித்தியாச முயற்சி , காதல்  , கமெர்சியல் என்று அனைத்து விதமான படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் பெரும்பாலும் இளையோர்கள் தான் குடும்ப ரசிகர்கள் நடுநிலை ரசிகர்களை அவரால் கவரவே முடியவில்லை. அவரின் வெற்றி படங்களும் ரசிகர்களை நிறைவு கொள்வதாகவே அமைந்தது. ரெட் ,ராஜா என்ற தோல்வி படங்கள் கொடுத்து இருந்த சமயத்தில் நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது வில்லன். இவரின் நடிப்பும் பேசப்பட்டது எல்லோரிடமும் கொண்டு சேர்த்தது.ஆனால்  பகவதி திரைப்படமோ விஜய் அவர்களுக்கு தோல்வி படமாக அமைந்து நல்ல கமெர்சியல் ஹீரோ அந்தஸ்த்து பெற முயற்சி செய்து கொண்டு இருந்தவருக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்தது.

திருமலை -ஆஞ்சநேயா (2003)


அஜித்-விஜய் என்ற பேச்சு பயங்கரமாக இருந்த சமயம் பல கைகலப்புகள் எல்லாம் வழக்கமாக இருந்தது. அஜித் நல்ல கமெர்சியல் நாயகான இருந்து வல்லரசு என்ற வெற்றி படம் எடுத்த இயக்குனர் அவரின் ஆஞ்சநேயா படம் பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளிவந்து மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது. ஆனால் விஜய் அதுவரை தேடி கொண்டு இருந்த கமெர்சியல் ரூட் பக்காவாக திருமலையில் செட் ஆனது வெற்றி படமாக அமைந்தது.இப்படங்களுக்கு பின் விஜய் ஏற்றமே எல்லோர் மத்தியிலும் குழந்தைகள் , பெண்கள் என்று ஆனால் அஜித்திற்கு ரசிகர்கள் குறையவும் இல்லை இளையோர்களின் மத்தியில் பெருகி கொண்டு தான் இருந்தனர் தோல்வி படங்களாக வெளிவந்து கொண்டு இருந்தாலும்.

பரமசிவன் - ஆதி (2006)


அதுவரையில் சில வருடங்களாக படங்களில் (ரெட், ஜி ,அட்டகாசம்,ஜனா ) உடல் உபாதைகளால் உட்கொள்ளும்  மருந்துகளால் உடற்பெருகி காட்சி அளித்து கொண்டு இருந்த அஜித் அப்பொழுது நடித்து கொண்டு  இருந்த வரலாறு  பின் நடிக்க இருந்த நான் கடவுள் படத்திற்காகவும் உடல் இளைத்து இருந்த சமயம் பாலாவின்  தயாரிப்பில்  நடித்த படமே பரமசிவன் தோல்வி முகமாய் இருந்தவருக்கு இப்படம் அவரை இளமையாக கண்டவிதத்தில் & நீண்ட நாட்களுக்கு(தண்டுவட ஆபரேஷன் ) பிறகு பைக் சாகசம் கண்ட ரசிகர்களுக்கு  அவரேஜ் படமாக தான் போனதே  தவிர  நல்ல ஒரு வெற்றி படமாக அமையவில்லை. விஜய் அவர்களோ கில்லி எனும் மெகா வெற்றியில்  தொடங்கி மதுர , திருப்பாச்சி ,சிவகாசி என்று  மிக பெரிய இடத்தில் இருந்தவரை தன் அப்பாவின் தயாரிப்பில் திருமலை என்ற திருப்புமுனை படத்தின் இயக்கத்தில் வெளிவந்த ஆதி படுதோல்வி அடைந்தது.

ஆழ்வார் -போக்கிரி (2007)


வெற்றிக்காக நான்கு வருடங்கள் காத்திருந்த அஜித் மற்றும் அவர் ரசிகர்களுக்கு வராலறு என்ற  மிக பெரிய வெற்றியை  கொடுத்து நான் கடவுள் என்ற படத்தில் இருந்து அஜித் விலகி பின் புதுமுக இயக்குனரின் படைப்பில் (ப்ளீஸ் திட்டிடாதீங்க) வெளிவந்த ஆழ்வார் மெகா  தோல்வியை  சந்தித்தது. போக்கிரி படமோ விஜய்க்கு இன்னுமொரு கில்லி வெற்றி போல அமைந்தது. அஜித்-விஜய் என்ற நேரடி  போட்டியில் இராண்டாம் முறை திருமலைக்கு பிறகு விஜய் அருமையான வெற்றி பெற்றார்.


அதை  தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாக போகின்றது. போக்கிரி பிறகு விஜய் இறங்குமுகவே தொடர்ந்தார் வேட்டைக்காரன் எனும் அவரேஜ் படம் வரை, விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு பலமாக ஒலித்தது நஷ்ட ஈடு கேட்டு பேட்டி தர தொடங்கி விஜய்க்கு சோதனை  காலமாகவே இருந்தது காவலன் வெளியாகும்  வரையில் பின்னரும் அவரேஜ் படங்களாக தொடர்ந்து நண்பன் படத்தில் நிமிர்ந்து துப்பாக்கியில் மீண்டும் அதே உயரம் சென்றவரை தலைவா கீழே தள்ளிவிட்டது.  எப்பொழுதும் சூப்பர் குட் பிலிம்ஸ் படம் என்றாலே விஜய்க்கு பெரிய வெற்றி   தான்  அதே  நம்பிக்கையில்    தான்  அவர்களும் நாமும் இருக்கின்றோம். படத்தின் முன்னோட்டங்களை காணும் பொழுது எந்த ஒரு  வித்தியாசமும்  தோன்றவில்லை அக்மார்க் விஜய் படம் தான் போல என்ன முந்தைய பொங்கலுக்கு ஆதி போலா இல்லை போக்கிரி போலாகுமா என்று தான் பார்க்க வேண்டும். 

ஆனால் அஜித் பில்லா வெற்றிக்கு பிறகு எத்தனை தோல்வி  படங்கள் தந்தாலும் கிங் ஒப் ஒபெநிங்  என்று அழைக்கபட்டார். தோல்விகள் தொடர்ந்தாலும் எந்த விநியோகஸ்தர்களும் நஷ்ட ஈடு கேட்டு பேட்டி தரவில்லை.மங்காத்தாவின் வெற்றி அவரின் மாஸ் அந்தஸ்த்தை ஆணித்தரமாக உறுதி செய்தது    விஜய் அரசியலில் காலுன்றுவது போல அணிலாக செயல் பட தொடங்கிய நேரம் அஜித்  ரசிகர் மன்றங்களை களைத்த பின் பெற்றதே மங்காத்தா  வெற்றி பின்   தொடர்ந்த பில்லா 2 தோல்வி என்றாலும் முதல் வார  கலெக்சன் ஒபெநிங் அதற்கு நிகர் இல்லை வரிசலுகை அற்று. வெளிவந்த  ஆரம்பம் கூட நல்ல வசூல் தான் அந்த நிலையோடு வெளியாக போகும் வீரம் அவரேஜ் ஆக இருந்தால் கூட தப்பித்து கொள்ளும்.

ஜில்லா- விஜய்க்கு அவசியம்  தேவையான முக்கிய வெற்றி 

வீரம் - தொடர் வெற்றி என்ற ரீதியில் தேவையான வெற்றி 

பின் குறிப்பு :

1. ப்ரெண்ட்ஸ் - தீனா படங்கள் முதல் நான் பார்த்ததை கொண்டே குறிப்பிட்டு உள்ளேன். அதற்கு முன் உபயம் விக்கி.

2. யாருக்கும் சாதகமா எழுதலை அப்படி உண்மை அல்லாதவற்றை எழுதி இருந்தால் குறிப்பிடுங்கள் நீக்கி விடுகிறேன். 

8 comments:

  1. ஆஹா.. அடாடா.. படம் ரிலீஸ் ஆறதுக்கு 2 நாள் முன்னாடி சரியான சமயத்துல தான் இந்த போஸ்ட்ட போட்டுருக்கீங்க.. சூப்பர் தல..!! இத்தினி படம் நேருக்கு நேர் மோதியிருக்கா ??
    அப்போ இந்த பொங்கல் தல-தளபதி ரசிகர்களுக்கு சரியான விருந்து தான் போங்க..!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல டைம் பார்த்து தான் போட்டேன் ஆனாலும் இது போல பதிவிடணும்னு ரொம்ப நாள் ஆசை அதான் படம் எப்படி இருக்குனு தெரியாது அதான் முன்னயே போட்டுருவோம்னு போட்டுட்டேன் ... இதோ இன்னைக்கு நைட் 9மணி வீரம் 12மணி ஜில்லா பாக் டு பாக் கலக்கல் தான் பாருங்க :)

      Delete
  2. தல, அப்றம் ஒரு ஹம்பிள் ரிக்வஸ்ட்டு.. பதிவெழுத ஆரம்பிச்சு இவ்ளோ நாள் ஆச்சி.. ஆனா இன்னும் எழுத்துப்பிழைகள் நிறைய வருது பாருங்க.. போஸ்ட் பண்ணறதுக்கு முன்னாடி ஒருக்கா நல்லா செக் பண்ணிப் பாத்துட்டு அப்றமா போஸ்ட் பண்ணா நல்லாருக்கும்..தப்பா நினைச்சுக்காதீங்க..

    ReplyDelete
    Replies
    1. ஆமா தல பிழைகள் வருவதை இனி தவிர்க்க முயல்கிறேன். இதுல என்ன தப்பா நினைக்கிறது கூல் :)

      Delete
  3. நல்ல பதிவு... ஒரு சில தகவல் பிழைகள் மட்டுமே!

    // இவ்வருடத்திலேயே நடுபகுதியில் வெளிவந்த ஆசை படமும் அஜித்திற்கு மிக பெரிய வெற்றியையும் அதுவரையில் அரவிந்த் சாமி போல மாப்பிள்ளை பார்த்த நம் தமிழ்நாடு அஜித் போல மாப்பிள்ளை வேணும் என்று சொல்ல தொடங்கியது.ஆக இருவரும் 1996ல் வெற்றி பெற்று நாயகர்களாக வர தொடங்கிவிட்டனர். //

    வான்மதிக்கு முன்பாகவே 1995-ஆம் ஆண்டில் “ஆசை” வெளிவந்துவிட்டது!

    // பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை, ஒன்ஸ் மோர் என்று ஹிட்களை கொடுத்து நல்ல அடித்தளமிட்டு கொண்டு இருந்தவருக்கு நிலவே வா தோல்வி படமாகவே அமைந்தாது //

    பூவே உனக்காக, ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை... இந்த வரிசையே சரி!


    // இவ்வருடம் 1998 தான் காதல் மன்னன் பாடல்கள் பட்டைய கிளப்பியது எஸ்.பி.பி குரலில் ஆனால் விஜய் நல்ல காதல் அம்சம் உள்ள வெற்றி படங்களாக தொடர்ந்து ஹிட் கொடுத்து கொண்டே இருந்தார்) //

    இதே காலகட்டத்தில் காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய்-ஐ தொடர்ந்து ப்ரியமுடன், நிலவே வா, என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு என விஜயின் அனைத்து படங்களும் ஃப்ளாப். ஒரே விதிவிலக்கு : துள்ளாத மனுமும் துள்ளும்!

    ஆனால் அஜித்தின்,
    காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் , தொடரும் , வாலி , ஆனந்த பூங்காற்றே, நீ வருவாய் என , அமர்க்களம், முகரி என அஜித்தின் அனைத்து படங்களும் அபவ் ஆப்ரேஜ்/ ஹிட். ஒரே விதி விலக்கு : உயிரோடு உயிராக ( இதிலும் பாடல்கள் பிரமாதமாக இருக்கும் )

    இதனையடுத்து நீங்கள் குறிப்பிட்டவை உண்மைதான்...





    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா தீனா- ப்ரெண்ட்ஸ் படங்களின் போது தான் உன்னிப்பாக கவனிக்க தொடங்கிய காலங்கள் அதன் முன் விவரம் தெரியாமல் படித்தது விக்கியில் எடுத்தது என்று கொஞ்சம் தவறாக வந்துவிட்டது அதை நீங்கள் பின்னுட்டத்தில் தெரிவித்து எல்லோருக்கும் தெளிவாக விளக்கிவிட்டீர்கள்.... இனி வரும் பதிவுகளில் தவறிழைக்காமல் பார்த்துகொள்ளுகிறேன்... வருகைக்கு மிக்க நன்றி :)

      Delete