Friday 7 February 2014

பண்ணையாரும் பத்மினியும் - சூப்பர் பீல் குட் மூவி

திரைப்படம் பார்க்கும் பொழுது அதனுள் எளிதாக நாம் உள்நுழைய வேண்டும் அதனோடு பயணிக்க வேண்டும் இறுதியில் அதன் முடிவு நம்மையும் ஈர்க்க வேண்டும் அதை நினைத்து பெருமிதம் கொள்ளவைக்க வேண்டும். அப்படி தான் என்னை உணரவைத்தது நேற்று நான் பார்த்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம்.


90களின் தொடக்கம் நம் கிராமங்களில் விஞ்சான படைப்புகளின் வருகை ஆரம்பித்த நேரம், அப்பொழுது எல்லாம் போன், டிவி என்று அந்த ஊரிலேயே உள்ள பெரிய பண்ணையார்  வீட்டில் தான் இருக்கும் அங்கே தான் எல்லோரும் சென்று அதை காண்பதை உபயோகிப்பதை வழக்கமாக செய்வர். அப்படி அதை மற்றவர்கள் உபயோகிக்கும் போது பெருமிதத்துடன் காண்பது அவ்வீட்டில் உள்ளவரின் வழக்கமாக இருக்கும். இந்த அனுபவம் எனக்கும் கூட உண்டு அப்படி அந்த ஊருக்கு முதல் முறை ஒரு சந்தர்பத்தில் கார் அந்த பண்ணையார் வசம் சில நாட்கள் இருக்குமாறு வந்து பின் இறுதிவரை உடன் இருந்ததா என்பது தான் கதை அதை எவ்வளவு சுவாரசியமாக தர வேண்டுமோ அப்படியே தந்து உள்ளனர்.

விஜய் சேதுபதி படத்திற்கு படம் மனிதர் மேன்மை அடைந்து கொண்டே இருக்கின்றார் , வளர்ந்து வரும் ஹீரோ நிச்சயம் இது போன்ற படைப்புகளில் நடிக்க தயங்கவே செய்வர் உதாரணம் சிவகார்த்திகேயன் அவரின் படங்களில் அவரை சுற்றி தான் களம் இருப்பது போல பார்த்து கொள்கிறார் அது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் வி.சே படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லோரின் நடிப்பிற்கும் ஸ்பேஸ் உள்ள கதைகளில் நடித்து தனி ட்ரென்ட் போல உருவாக்கி கொண்டு இருக்கின்றார். உடல் மொழியில் மனிதர் படத்திற்கு படம் வித்தியாசமாக நடிப்பது இவரின் தனித்தன்மையை நன்கு புரியவைக்கின்றது பார்வையாளர்களுக்கு. படத்தில் பண்ணையாரின் மகளிடம் உதவி கேட்க சென்று அக்காட்சியில் விஜய் சேதுபதி வசன உச்சரிப்பு மிகவும் அருமையாக இருந்தது. பண்ணையாருடன் சேர்ந்து கொண்டு துளசியை (பண்ணையாரின் .மனைவி ) கலாய்க்கும் இடமும் சுவாரசியமாக இருக்கும். இவரின் காதல் காட்சிகள் திணிப்பு என்றாலும் ஓகே தான். குறையாக தெரியவில்லை.


ஜெயப்ரகாஷ் -துளசி இவர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இவர்களை சுற்றி தான் படத்தின் மொத்த கதையும். இருவரும் மிக மிக அழகாக நடித்து உள்ளனர். ஒரு படத்தில் ஜெயப்ரகாஷ் நடித்து உள்ளார் என்று தெரிந்தாலே அந்த படத்தின் தரம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளவன் நான் அப்படி தான் மூடர் கூடம் படம் எல்லாம் நம்பி போனேன். அவரும் ஒவ்வொரு படத்திலும் அந்த நம்பக தன்மையை என்னுள் அழுத்தமாக நிருபித்து கொண்டே இருக்கின்றார். படம் முழுக்க நடிப்பு வேட்டை நடத்தி உள்ளார். வெள்ளாந்தியாக இவர் கேட்கும் கேள்விகள் , சிரிப்பு ,பார்வை என்று பிச்சு உதறி உள்ளார் , அதுவும் இவர்களுக்கான காதல் காட்சிகளை நமக்கும் உணரவைத்து நம்மை ரசிக்க வைத்த இடத்தில் கிளாஸ் மிக அருமையாக இருக்கும். இவர்களுக்கான அன்னியோன்யம் நிச்சயம் படத்தை காணும் எல்லோருக்கும் பொறமை கொள்ள தான் செய்யும் படத்தின் வெற்றி அதில் தானே உள்ளது.

பீடையாக வரும் பாலா இப்படத்திற்கு பிறகு நிச்சயம் நகைச்சுவை பாத்திரங்களில் தனி வளம் வருவார். இயல்பான காட்சிகளில் எல்லோரையும் இவர் தான் சிரிக்க வைத்து உள்ளார்.சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட மனதில் பதிந்து போனது இயக்குனரின் தேர்விற்கு கிடைத்த வெகுமதி அதை படம் பார்க்கும் பொழுது நிச்சயம் நீங்களும் உணர்வீர்கள்.

இசை ஜஸ்டின்  மண் சார்ந்து மண் வாசத்தோடு இருபது வருடம் பின்னே அழைத்து சென்று விட்டது படத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது.கோகுலின்  ஒளிப்பதிவு உறுத்தவில்லை ஆனாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்து இருக்கலாம் சில காட்சிகள் ப்ரேமில் செட் ஆகாமல் இருப்பது என்ன யுக்தி என்று தெரியவில்லை. ஒரு வரி கதையை வைத்து அதை இரண்டரை மணி நேர திரைப்படமாக எடுத்தால் அதில் மிக மிக முக்கியமான பங்கு எடிட்டிங்க்கு இருக்கும் அது இந்த படத்தில் மிக அருமையாக இருக்கின்றது . ஸ்ரீகர் பிரசாத்திற்கு சொல்லியா தர வேண்டும் ???

இயக்குனர் அருண் குமார்  தன் முதல் வருகையை மிக அழுத்தமாக பதிவு செய்து அதில் நல்ல வெற்றியையும் பெற்று உள்ளார். இயக்குனராக அனைத்து பகுதிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி மிக சிறந்த படைப்பாக கொண்டு வந்து உள்ளார்.குறும் படத்தை  எப்படி திரைப்படமாக எடுக்கலாம் என்று பாடமாக  எடுபதற்கு படமாக எடுத்து விட்டார் போல , வாழ்த்துக்கள் அருண்  குமார்.

பண்ணையாரும் பத்மினியும் குடும்பத்தோடு நிச்சயம் எல்லோரும் காண வேண்டிய அருமையான சிறந்த திரைப்படம்.

7 comments:

  1. good review .. believe director name is Arun kumar

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா தவறை சுட்டி காட்டியமைக்கு திருத்திவிட்டேன் .... மீண்டும் வருக :)

      Delete
  2. சூப்பர் தல.. ஜெயப்ரகாஷ் எனக்கும் புடிச்ச ஒரு குணச்சித்திர நடிகர்.. அவருடைய முழுத்திறமையும் இன்னும் சரியா வெளிப்படலை அல்லது தமிழ்சினிமா அவரை ஃபுல்லா யூஸ் பண்ணிக்கலனு தான் சொல்லுவேன்.. அவ்ளோ நல்ல நடிகர் அவரு..

    //போன், டிவி என்று அந்த ஊரிலேயே உள்ள பெரிய பண்ணையார் வீட்டில் தான் இருக்கும் அங்கே தான் எல்லோரும் சென்று அதை காண்பதை உபயோகிப்பதை வழக்கமாக செய்வர்.// எனக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு அனுபவம் இருக்கு தல.. !!

    ரம்மி படம் ஏதோ சொதப்பிருச்சுனு கொஞ்ச பேரு சொல்லுறாங்க.. அப்போ விஜய் சேதுபதிக்கு அடுத்த ஹிட்டு இந்தப்படம்னு சொல்லுங்க.. :) :)

    ReplyDelete
    Replies
    1. அருமையான படம் நீங்க பார்த்திட்டு இன்னும் விரிவாக எழுதுங்க , ஜெயப்ரகாஷ் இந்த படத்தில் இதுவரையில் நடித்ததை விஞ்சி உள்ளார் நண்பா ....

      Delete
  3. Replies
    1. நன்றி !!! வருகைக்கும் கருத்திட்டமைக்கும் :)

      Delete
  4. Hotels near Casino Resort in Sparks | Mapyro
    Hotels 광명 출장마사지 1 - 12 of 62 계룡 출장안마 — The 천안 출장안마 hotel, Casino Resort, and Sq. 경상남도 출장안마 24 at the resort. It features a spa, restaurants, and a health 김포 출장마사지 club. MapYRO Hotels: 3,716

    ReplyDelete