Sunday 13 October 2013

"க்ராவிடி" (GRAVITY) - சாகச அனுபவம்

போனவாரம் வெளியான ரெண்டு தமிழ் படமும் (வணக்கம் சென்னை & நய்யாண்டி ) வெளியாவதற்கு முன்னேயே அதை பற்றிய என் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்தது இப்பொழுது வெளியானதுக்கு பிறகு, ஆனா அதுலையும் வணக்கம் சென்னை வம்படியாக போகி மொக்கை வாங்குனேன். அந்த சோகத்த எப்படிடா போக்குறதுனு நினைச்சிட்டு இருந்தப்போ, நாமலும் ரெம்ப நாள் ஆச்சு திரைஅரங்கில் ஹாலிவுட் படம் பார்த்து , இங்கையும் சில நண்பர்கள் சொல்லிடே இருந்தாங்க கடந்த இரண்டு வாரமாக படம் மிக அருமையாக இருக்குது பாருங்க என்று,  அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம குழு (https://www.facebook.com/groups/ThirstForCinemas)  திரைப்படங்கள் பற்றி விவாதிக்க கூடிய அருமையான களம் எந்த நாட்டு படமும்   என்ன மொழிப் படமும் பற்றி முழுமையா தெரிஞ்சிக்கலாம். அப்படி அவுங்கட்ட கேட்டா இதலாம் இப்படி கேட்ககூடாது போய்  பார்த்துட்டு வந்து சொல்லணும் அப்படின்னு நமக்கு  இன்னும் ஹைப் ஏற்றி விட கண்டிப்பா போய்டனும்னு, போயாச்சு.          "க்ராவிடி" (GRAVITY)


பெரும்பாலும் நான் என்னோட திரைப்படம் பற்றிய பார்வையை தெரிவிக்கும் போது அந்த படத்தின் தன்மையை பொருத்து கதை சொல்லி தெரிவிப்பதும் இல்லை சொல்லாமல் கூறுவதும் அமையும். அதே போல இந்த படத்தின் கதை வெறும் இரண்டு வரி என்பதால் நிச்சயம் சொல்லிடவேண்டும் அப்படி சொல்லாம எனக்கு ஹாலிவுட் படம்  விவரிக்க வாராது அது வேற விஷயம். அதனால நாம நேரடிய கதைக்கு போவோம்

விண்வெளியில்  இன்ஜினியர் ஸான்திரா , விண்வெளி வீரர் ஜார்ஜ் க்ளூனி இருவரும் விபத்துக்குள்ளாகின்றனர், தப்பித்து இவர்கள் தரை இறங்கினார்களா என்பது தான் கதை.

90நிமிடங்கள் இதை எவ்வளவு சுவாரசியமாக ,  பார்வையாளர்களை  எந்தளவுக்கு பரவசம் தர முடியுமோ அதை அப்படியே நமக்கு தந்து உள்ளனர். படம் முழுக்க இந்த இருவர் மட்டுமே வேறு எவரையும் ஒப்புக்கு கூட காட்டவில்லை , முழுக்க முழுக்க விண்வெளியில், இன்னொரு உலகம் என்பதை கண்ட பரவசம் படத்தை காணும் பொழுது உணர முடிந்தது.


படத்தின் என்னை மிகவும் சிலிர்க்க வைத்தது பல காட்சிகள்.

இன்ஜினியர் ஸான்திரா விண்கலம் வெளியில் பிடிப்பு இன்றி தடுமாறிக்கொண்டு இருக்கும் பொழுது இவரை ஜார்ஜ் க்ளூனி காப்பாற்றும் உதவும் காட்சி என்னை சீட் நுனிக்கு கொண்டு வந்து விட்டது.

அதே போல விண்வெளியில்  நிறைய கோள்கள் நட்சத்திரம் சில கற்கள் ஏதோ பாய்ந்து வருவது போல நம்மை உணரவைத்து பின் மெல்ல மெல்ல வர வர அது அந்த இரு வீரர்கள் தான் என்று தெரியும் பொழுது , என்னமா எடுத்துருக்காய்ங்க என்று ஆச்சிரியபடாமல் இருக்க முடியவில்லை.

இன்ஜினியர் ஸான்திரா தன்னந்தனியாக தடுமாறிக்கொண்டு எப்படியாவது விண்கலம் உள்ளே சென்றுவிட வேண்டும் என்று முயற்சிக்கும் காட்சிபொழுது  எதிர்ப்பார்ப்பு நமக்கும் உள்ளே செல்ல வேண்டும் என்று நம்மை அறியாமல் தொற்றிக்கொள்ளும்.

விண்கலத்தின் உள்ளே நுழைந்தவுடன் அவளின் படபடப்பு , உடற்கவசங்களை அவிழ்க்கும் பொழுது அப்படியே விசையில் தவழ்ந்து கொண்டே அனைத்தையும் விடுவிக்கும் முறை , இப்படி தான் விண்வெளியில் இருப்பார்கள் என்றே முடிவு செய்தேன்.

விண்கலத்தின் உள்ளே  ஸான்திரா தன் நிலைமையை நினைத்து கலங்குமிடம் அவளின் கண்ணீர்துளிகள் அங்கே அப்படியே விளாமல் பறக்கும் பொழுது அதை காட்சிபடுத்திய விதம்வியப்பில் மூழ்கிவிட்டேன்.

விண்வெளி , விண்கலம் அங்கே என்ன உணர்வான ஒலி  ஒளி இருக்குமோ இப்படி தான் இருக்கும் என்றே என்னை பரவசபடுத்தியது.அதிலும் ஸ்பேஸ் வெளியில் இருக்கும் பொழுது அந்த கவசங்களை உடன் அணிந்து பேசும் பொழுதும் , அதே அவர்கள் விண்கலம் உள்ளே பேசும்பொழுது வெளியில் கேட்பது எவ்வளவு நுட்பமாக பணியாற்றி உள்ளனர் என்பது பளிச்சிடுகின்றது.

வெறும் இரண்டு கதாபாத்திரங்கள் அதிலும் ஒருவர் மட்டுமே குறைந்தது 50 நிமிடங்கள் வருகிறார் , அதை காணும் நமக்கு எந்தவொரு சலிப்பும் இல்லாமல் ஒவ்வொரு நொடியும் பரவசமாக்குகிறது க்ராவிடி . இதன் கிரியேடிவிட்டி அல்போன்சோ இவருக்கு என்னா அறிவு என்னா மூலை.


சகச பயணம் விரும்புவோர் , விண்வெளி பற்றிய தகவல்கள் விரும்புவோர் , விண்வெளியில் பயணிக்க விரும்புவோர் நிச்சயம் இந்த படத்தை தவிர்க்க விட கூடாது. நுட்பமான பல அறிவியல் பூர்வமான விஷயங்களை கையாண்டு மிக சிறப்பாக வெளி கண்டுள்ளது.

90 நிமிடங்கள் படம் முடிந்து என் இருக்கையை விட்டு நான் எழுந்து வெளியில் வந்த பொழுது , விண்கலத்தில் இருந்து பூமிக்கு வந்து நடக்க முடியாமல் தவழும் பொழுது சிரித்து கொண்டே ஓர் உணர்ச்சியை வெளிக்காட்டும் உணர்வு படத்தில் வருவது போல  எனக்கும் தந்தது  அதுவரை நானும் அவர்களோடு பயணித்த உணர்வு. வேறுஒரு உலகத்தில் பயணித்த அனுபவம் இந்த படம் உறுதியாக தரும். தவறவிடாமல் அனைவரும் நல்ல திரை அரங்கில் சென்று காணுங்கள்.

பின்குறிப்பு:

1.ஒலி  ,ஒளி   சிறப்பு மற்றும் இதர பல விஷயங்களுக்காக I-max 3D தான் சிறந்தது என்று அங்கேயே போய்ட்டேன்.மிக அருமையாக உணர முடிந்தது அதுவும் பல காட்சிகள் கையை இருக்க கட்டிகிட்டேன்.

2. இது தான் முதல் முறை ஒரு வேற்று மொழி படத்த பற்றி நான் எழுதுவது. அதனால குறை இருந்தா ப்ரீயா விடுங்க , சொல்லுங்கள் திருத்திக்கொள்ளப்படும்.

         

6 comments:

  1. என்னாது இது ஆளாளுக்கு இந்தப் படத்தை இப்டி புகழ்றீங்களே..!! அப்போ கண்டிப்பா தியேட்டர்ல போயி பாத்தே ஆகனுமா..

    தல அப்றம் இன்னொரு சஜசன்.. :) ஒவ்வொரு பதிவுக்கும் லேபிள் கொடுக்கும்போது நிறைய லேபிள்கள் கொடுங்க.. உதாரணத்திற்கு இந்தப் பதிவுக்கு, இந்தப்படத்தோட ஜானர்களையும் லேபிளா கொடுக்கலாம்.. Drama | Sci-Fi | Thriller னு.. பிற்காலத்துல ப்ளாக் ஃபுல்லா ஏகப்பட்ட பதிவுகள் இருக்கறப்போ ஜானர் வாரியா தேடுறதுக்கு ஈசியா இருக்கும்..!!

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பா ...கண்டிப்பா நல்ல தியேட்டர் போய் பாருங்க அதுவும் 3டி னா செம்ம, ஆங்கில படம் பிடிக்காதவுங்களுக்கு கூட இந்த படம் பிடித்து போகும் அவ்வுளோ நேர்த்தி. மேற்கூறிய மற்ற விஷயங்களை கவனித்து விடுகின்றேன் நண்பா நன்றி :) :)

    ReplyDelete
  3. அல்போன்ஸோ க்ரோன் பற்றி சொல்லத் தேவையில்லை.... மெய்யிக்கோவின் மூன்று நண்பர்களில் ஒருவர். நண்பர்கள் என்றால் சும்மா பேச்சுக்கு அல்ல... நகமும் சதையும் போல. அந்த மூன்று பேருமே மாஸ்ட்டர்ஸ்தான். ஒருவர் க்ரோன், அடுத்தவர் உலக சினிமாவை திருப்பிப் போட்ட படமான அமரோஸ் பெரோஸ் எடுத்த அல்ஹாந்ரோ கொன்ஸாலேஸ் இனரிட்டு அடுத்தவர் கியர்மோ டெல் டோரோ. ரொம்ப அனுபவித்து பார்த்து இருக்கிறர்கள் என்று தெளிவாக விளங்குது. இந்த கருமாந்திரம் புடிச்ச நாட்டுல இந்த படத்த போடல... அதுக்கு பதில மொக்க ஹாலிவூட் படங்கல போடுறாய்ங்க. பசுபிக் ரிம்முக்கும் இதுதான் நடந்தது.

    ReplyDelete
  4. நன்றி நண்பா எனக்கும் கவலை தான் உங்களூரில் வெளியாகதது :( , விரைவில் வெளியாக வேண்டும் உங்களின் வெளிப்பாடை காண ஆவலாக உள்ளது உண்மையில் படம் மிக அருமையாக உள்ளது. :) :)

    ReplyDelete
  5. இன்று பார்த்துவிட்டேன், இது ஒரு அனுபவம்.. இது தியேட்டரில் பார்த்தால் மட்டுமே உணர முடியும்....

    ReplyDelete
  6. நிச்சயம் நண்பா அருமையான அனுபவம் தான் , பல காட்சிகளில் அவர்களின் உணர்வு நம்மை தொற்றிக்கொல்வதால் இதை அனுபவம் என்று உறுதியாக கூறலாம்.நன்றி !!!

    ReplyDelete