
நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கே சந்திக்கின்றோம் வேறு வழியின்றி இன்றோடு இந்த தளம் தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியதால் ஏதாவது உருப்படியாக பதிவு செய்யலாம் என்று கடந்த மூன்று மாதங்களாக நான் வாசித்த புத்தகங்களை பற்றிய என் கருத்தக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்......
ஆதவனின் காகித மலர்கள் -
ஆதவனின் எழுத்தை படிக்க நிச்சயம் மன தைரியம் வேண்டும் எப்படியென்றால் அவர் கூறும் கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள் அனைத்திலும் வாசிப்போரின் எண்ணங்களை பிம்பங்களாக கூறுவது போலவே அமைந்திருக்கும். இதை ஏற்று கொள்ள நிச்சயம் மன தைரியம் இருந்தாலொழிய வாசிக்க இய