Friday, 14 February 2014

நாவல் சிறுகதையானது பின் நாவலாகும் - சிறுகதை

பனிபொழியும்  அதிகாலை நேரம் உன் முகம் பார்க்க சூரியனும் எட்டி எட்டிப் பார்க்கும் உன் வீட்டு ஜன்னல் ஓரத்தில்... நீ சோம்பல் முறிக்கும் அழகை பார்த்து சூரியனும் தலை சுற்றி தான் மேகத்தினுள் புதைந்து  போகும்... சிரித்து கொண்டே கார்த்திக்கை பார்த்து போ படிக்க மாட்டேன் என்று சிணுங்குகிறாள் சந்தியா. ஹே என்ன ரெண்டு வரி படிச்சுட்டு அதுக்குள்ள வெட்கபடுற முழுசா படிடா என் செல்லம்ல என்று அவளின் கன்னத்தை தட்டுகிறான் அவளும் படிக்க தொடங்குகிறாள் மனதுக்குள்ளேயே. நீ போடும் கோலம் கூட கலைந்து கலைந்து நீண்டு கொண்டே போகும் இன்னும் கொஞ்ச நேரம் நீ கோலமிட &

Friday, 7 February 2014

பண்ணையாரும் பத்மினியும் - சூப்பர் பீல் குட் மூவி

திரைப்படம் பார்க்கும் பொழுது அதனுள் எளிதாக நாம் உள்நுழைய வேண்டும் அதனோடு பயணிக்க வேண்டும் இறுதியில் அதன் முடிவு நம்மையும் ஈர்க்க வேண்டும் அதை நினைத்து பெருமிதம் கொள்ளவைக்க வேண்டும். அப்படி தான் என்னை உணரவைத்தது நேற்று நான் பார்த்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம். 90களின் தொடக்கம் நம் கிராமங்களில் விஞ்சான படைப்புகளின் வருகை ஆரம்பித்த நேரம், அப்பொழுது எல்லாம் போன், டிவி என்று அந்த ஊரிலேயே உள்ள பெரிய பண்ணையார்  வீட்டில் தான் இருக்கும் அங்கே தான் எல்லோரும் சென்று அதை காண்பதை உபயோகிப்பதை வழக்கமாக செய்வர். அப்படி அதை மற்றவர்கள் உபயோகிக்