
கடந்த மூன்று மாதங்களாக எத்தனை படம் பார்த்தாலும் அது பற்றி சிலாகித்து எழுத வேண்டும் என்று தோன்றவில்லை , இன்று படம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடத்திலேயே நிச்சயம் எழுத வேண்டும் என்று தோன்றிவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் போட்ட டைட்டில்ஸ் போதும் அது பற்றியே நாலு பத்தி எழுதலாம் அந்தளவுக்கு அதை ரசிக்க வைத்து விட்டார். முதலிலேயே சொல்லிவிடுகிறேன் இது நிச்சயம் மிக தைரியமான முயற்சி அதில் வெற்றி பெறுவது பார்வையாளர்களாகிய நம் கையில் தான் உள்ளது. நான் பார்த்த திரைஅரங்கில் என்ன மாதிரியான மனநிலையில் எல்லோரும் சென்றார்கள் என்பதை இறுதில் சொல்லுகிறேன்.