
தன்னுடைய முதல்படம் தொடங்கி இன்றுவரையில் அவரின் அனைத்து 6 திரைப்படங்களிலும் (முகமூடியிலும்) தன்னுடைய தனித்துவத்தை தெளிவாக விளக்கியுள்ளார் , அவரின் கிளிஷேக்கள் கிண்டல் அடிக்கபட்டாலும் அதை தவிர்க்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றார். இயக்குனர் என்று ஒரு குழுவின் தலைவனாக திரைப்படத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் தன்னுடைய பங்களிப்பை செலுத்தி , பாமரனுக்கும் இது மிஷ்கின் படம்பா என்று சொல்லாமல் புரியவைத்தது உள்ளார். இவரின் இருளுலக படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. அப்படி ஒரு எதிர்பார்ப்பில் தான் "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" திரைப்படத