
நல்ல அற்புதமான உணர்வுடன் இத்திரைப்படத்தின் தாக்கங்களுடன் இருந்து சுவாசித்து, நாளையே எழுதலாம் என்று தான் நினைத்தேன் , ஆனால் முடியவில்லை , இப்பொழுதே கொட்டிவிடு என்று நினைக்க நினைக்க , அதுவும் சரி தான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாலே இன்பம் இன்னும் நூறு மடங்காகும் என்றே பதிவிடுகிறேன்.
திரைப்படம் என்பது பொழுதுபோக்கிற்காக மற்றும் வியாபார நோக்கத்திற்காக என்று எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில் , ஒரு உண்மையான எல்லோரின் வாழ்விலும் கடந்து மட்டும் செல்லாமல் என்றும் நினைவுகளாக இருந்து கொண்டு இருக்கும் தூய்மையான உண்மையான உயர்தரமான