Friday, 22 November 2013

இரண்டாம் உலகம் - தமிழ் சினிமாவின் புது உலகம்

முன்குறிப்பு :

இதுவரை நான் எழுதுவதை (கொஞ்ச நாளா தான்) தொடர்ந்து படித்து வர நண்பர்களுக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கும் , இயக்குனர் செல்வராகவனின் விசிறி நான்  என்பது ஆனால் இப்பொழுது அவரின் இரண்டாம் உலகம் என்ற திரைப்படத்தை பற்றி கூறும் பொழுது இதை விமர்சனம் என்று நினைக்காமல் முழுக்க முழுக்க என் பார்வையில் இரண்டாம் உலகம்  திரைப்படத்தின்  என்னுடைய கருத்து என்றே கூறிவிடுகிறேன்.

இரண்டாம் உலகம் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை வைத்து தான் காண சென்றேன்  ஆனால் நேற்று இரவு முதல் இன்று மலை வரை விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருந்தது , அதிலும் எதிர் விமர்சனங்கள் செல்வராகவனை முற்றிலும் புறம் தள்ளுவது போலவும்   மாறாக ஆதரவாக வருபவையோ செல்வாவின் மாஸ்டர் பீஸ் அடுத்த கட்டம் சென்று விட்டார் என்று சரி தான் இதுவும் இன்னொரு புதுபேட்டை , ஆயிரத்தில் ஒருவன் கேஸ் தான் போல  என்று ஒரு நிலைக்கு வந்து எப்பொழுதும் போல இயக்குனரின் மேல்  நம்பிக்கை குறையாமல் சென்றேன். முழுநிறைவோடும் மனம் முழுக்க ஒரு சின்ன கனத்தோடும் தான் வந்தேன் எங்கே இந்த படமும் கேட்பார் அற்று காலம் கடந்து புரிந்து கொள்ளப்படுமோ என்ற சந்தேகம் தான் இப்பொழுதைய தமிழ் சினிமாவில் அந்த சந்தேகம் அடிக்கடி நல்ல திரைப்படங்களை பார்த்தால் உடனடியாக வருகின்றது, மற்றபடி நம் சினிமாவிற்கு முற்றிலும் மாறுபட்ட அடுத்த நகர்வுக்கான அழுத்தமான தொடக்கமே இரண்டாம் உலகம்.


படத்தின் கதையை கூறினால் நிச்சயம் சுவாரசியம் குறைந்து போகும் அதிலும் மனித உணர்வுகளை தாண்டி படம் மேகிங்கில் மிரட்டுவதால் கதையை சொல்லுவது சரியாக இருக்காது. ஒரே வரி கதை ஆனால் அதை அற்புதமான திரைக்கதை  பின்னலால் ஆசாத்திய கதை ஆக்கிவிட்டார் இயக்குனர். உண்மையான காதல் எந்த கண்டமும் தாண்டி கூட வெற்றி பெரும். இது தான் கதை. மைய கதாபாத்திரங்கள் மொத்தமே 5 (அ) 6 நபர்கள் தான், அதிலும் பெரும்பாலான காட்சிகள் மௌன மொழியாகவே தன் படைப்பின் மேல் உள்ள நம்பிக்கையில் வசனமற்று  காட்சி மொழியாகவே படைத்து இருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டும், திரைப்படம் காட்சி மொழி என்பதை எல்லோருக்கும் உணர்த்துவதற்கு.

ஆர்யா, நிச்சயம் நான் கடவுள் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்டு திறமையை வெளிக்காட்டியது , ஒரு காட்சியில் கூட அவரின் முந்தைய எந்த சாயலும் வெளிபடாதது வியப்பை தான் தந்தது. முதலில் அனுஷ்காவிடம் முடியாது என்று சொல்லிவிட்டு பின் காதலுக்காக ஏங்குவதும் உருகுவதும் கிளாஸ் ஆக்டிங். மாவீரனாக உருவெடுக்கும் போது புகுந்து விளையாடி இருக்கிறார் , எகத்தாளமான பேச்சு அனுஷ்காவிடம் மட்டும் அடங்கி போவது என்றும் பின் எழுச்சி பெறுவதும் என்று ஆர்யாவின் மைல்கல்லாய் தான் இருக்கபோகின்றது இரண்டாம் உலகம். அதுவும் இடைவேளைக்கு முன் வரும் காட்சிகளும் நாயுடன் சேர்ந்து நடிக்கும் பொழுதும் கலங்க வைத்து விடுகிறார் பின் தொடர்ந்து இடைவேளை பிறகு தொடரும் காட்சிகளிலும் தேடுதலை துவங்கும் போது அப்ளாஸ் அள்ளினார் திரை அரங்கில். மிருகத்தோடு சண்டையிட்டு பின் வெற்றி பெரும் காட்சி வெறி திமிர் தெரிந்தது ஆர்யாவிடம், அதே போல இறுதிகட்ட காட்சிகளில் காதலை உணர்வதும் ஒருவர் பின் காதல் சேர்ந்த நிறைவு கொள்ளுவதும் என்று இருவேறு பாத்திரத்தில் நன்றாக முழுமை பெற்று இருப்பார்.

அனுஷ்கா இதுவரை தமிழ் சினிமாவில் இவரை பயன்படுத்திய இயக்குனர்கள் பார்த்தால் வெட்கி தலை குனிய தான் வேண்டும். முழுகதையையும் தன்னை சுற்றி வர கூடிய மைய பாத்திரம் ஆனால் இவரோ அனாசியமாக நடித்து தள்ளிவிட்டார். ஆர்யாவிடம் காதலை சொல்ல தடுமாறுவதும் பின் வருந்துவதும் என்று சுடிதாரில் பல பேர் மனதுகளை கொள்ளை கொள்ள போகிறார். ஆர்யாவிடம் முரண்டு பிடித்து சண்டை போடுவதாகட்டும் பின் தேடி செல்லுவதாகட்டும் அனுஷ்கா என்ற நடிகைக்கு கிடைத்த அற்புத படைப்பு இரண்டாம் உலகம். சண்டை காட்சிகளில் எத்தனை நாட்கள் தான் பெண்களில் விஜயசாந்தி என்றே கூறி கொண்டு இருப்பது , இதில் பாருங்கள் பின் நான் சொல்லுவது புரியும்.அனுஷ்காவின் தோழியாக வருபவரும் தன் தேர்வை சரி செய்து இருப்பார் அதே போல ஆர்யாவின் நண்பனாக வருபவர் (சுட்ட கதை படத்துல நடிச்சவரா ???) முதல்பாதியில் வரும் காட்சிகளும் பின்  கனிமொழியே பாடலிலும் கிச்சு கிச்சு மூட்டுவார்.அதே போல சிறிது நேரம் மட்டும் வரும் ஆர்யாவின் அப்பா ஒரு சின்ன தாக்கத்தை தருவது நிச்சயம் அதுவும் அவரின் அறிமுகம் கொஞ்சம் சிறு அதிர்ச்சி மற்றும் உணர்வை தூண்டும் காட்சியாக தான் எனக்குப்பட்டது.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி , நீண்ட நாட்களுக்கு பிறகு நம் திரைப்படங்களில் அற்புதமான ஒளிப்பதிவு இதில் , மழையோடு அனுஷ்கா விளையாடும் பொழுது இவரின் காமெராவும் விளையாடியது போல கொள்ளை அழகு அதுவும் கண்ணாடியில் மழை நீர் சொட்ட சொட்ட அதன் பின் இருக்கும் அனுஷ்காவை அப்படியே காட்டும் பொழுது கவிதை போல இருந்தது. இடைவேளைக்கு முன் வரும் இரவு நேர காட்சிகளில் அப்படியே துள்ளியமான அந்நேரம் கிடைத்தது என்று படம் முழுக்க தன் பங்கை மிக திறமையாக கையாண்டு உள்ளார் ராம்ஜி. வி.எப்.க்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம்  குறிப்பிட்ட பட்ஜெட்டில் மிக அற்புதமாகவே இதுவரை வந்ததை காட்டிலும் சிறந்ததாகவே வந்துள்ளது அதற்க்கும் இப்படமே முன்னோடி தான்.


பாடல்கள் மிகபெரிய மைனஸ் அதுவும் செல்வாவின் படங்களில் இது மட்டுமே விதிவிலக்கு , ஏதோ காட்சிபடுத்துதலில் அதை கொஞ்சம் ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர். ஹாரிஸ் போட்ட பின்னணி இசை கூட வரவில்லை படத்தில் எந்த இடத்திலும். பின்னணி இசையில் அனிருத் இன்னும் எதிர்பார்த்தது, ஆனால் பெரும்பாலான இடங்களில் மௌனமாகவே இருந்தது தேவை உணர்ந்து இவரிடம் பெற்றது வெளிப்பட்டது. ஆர்யா முதல் முதலில் அனுஷ்காவை நினைத்து காதலில் தவிக்கும் பொழுது வரும் பின்னணி இசை, கோவா செல்லும் பொழுது தொடரும் இசை , இடைவேளை முன்னும் பின்னும் தொடர்ந்து அதிரடியின் போதும் மிரட்டி தான் உள்ளது அனிருத்தின் இசை.

இயக்குனர் செல்வராகவன் , இப்படி பட்ட கதையை நம் மக்களை நம்பி யோசித்து அதை எடுத்தமைக்கே இவரை பாராட்ட வேண்டும் அதிலும் தன்னால் முடிந்த அளவு வெற்றியும் பெற்று இருக்கிறார். நிச்சயம் இரண்டாம் உலகம் தவிற்க முடியாத படமாக தான் ஆகும். அதுவும் இக்கதை ஒரு நாவலாக வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், அத்தனை அம்சமும் இக்கதையில் இருக்கின்றது திரைப்படத்தை விட இன்னும் சிறப்பாக வரும் நாவலாக வந்தால். ஆயிரத்தில் ஒருவன் படத்துல பேசுன தமிழ் புரியலைன்னு சொன்னதுக்காக இதுல எல்லாரையும் சுத்த நடைமுறை  தமிழ்ல பேசவுட்டு பதில் சொல்லிட்டார் போல , அப்புறம் ஹாலிவுட் படம் மட்டும் தான் நம்ம ஆளுங்க வரவேற்பாங்க போல என்று பெரும்பாலான துணை நடிகர்கள் வெளிநாட்டினரே போட்டு எடுத்து இருக்கார். இதனாலும் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள். அதையும் விடுத்து இதில் லாஜிக் பார்த்து குறை சொன்னால் நிச்சயம் தனிப்பட்ட இயக்குனரின் மேல் ஆனா பார்வையே. இது அவர் உருவாக்கிய உலகம் அவரை நாம் தொடர்ந்தாலே புரிந்துவிடும்.

சில இயக்குனரின் படங்களை டெம்ப்ளேட் காட்சிகளோடு பார்ப்போம் , சில நாயகர்களின் படங்களை அவரின் வருகை எப்போ எப்போ என்றே காண்போம் ஆனால் சில படங்களை நாம் சிறு வயதில் கேட்ட கதை போல என்ன என்ன என்று அடுத்து அடுத்து இயக்குனரை பின் தொடர வேண்டும் அப்பொழுது மட்டுமே நிச்சயம் முழுமை பெற முடியும் அவ்வகையான திரைப்படமே இரண்டாம் உலகம். பெருமைமிகு படைப்பு என்பதில் வியப்பேதும் இல்லை ஆனாலும் தற்போதைய நிலவரப்படி நல்ல சினிமாக்களை எல்லாம் கைவிடுவது  போல விடுத்து பின்னர் மட்டுமே விட்டதை நினைத்து வருத்தம் மட்டும் கொள்வோமோ என்ற நினைப்பு தான் உறுத்துகிறது.

இரண்டாம் உலகம் - தமிழ் சினிமாவின் புது உலகம்



பின்குறிப்பு :

1.முதல் நாள் என்றாலும் இதுவரை இங்கே பெரிய நடிகர்களின் படங்களை தவிர எதற்கும் கூட்டம் இருக்காது ஆனால் இன்று நான் கண்ட காட்சி ஹவுஸ் புல் , செல்வாவிற்கு இங்கே வரை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.

2. படத்தில் இடம் பெரும் சில வசனங்களை  மேற்கோள் காட்டி குறிப்பிட வேண்டும் என்றே தோன்றியது ஆனால் அவைகள் மிக முக்கியமான காட்சிகள்  என்பதால் தவிர்த்துவிட்டேன் அதை பற்றி பின்னர் இல்லை பின்னுட்டங்களில் பார்ப்போம்.அதே போல சொல்ல வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது அதையும் இன்னும் ரெண்டு மூன்று தடவை பார்க்க பார்க்க தெரியவரும் விரிவாக அப்பொழுது பார்ப்போம்.

3.என்ன இருந்தாலும் எனக்கு இதை விட ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்து இருந்தது அது ஏன் என்றால் ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்தவருக்கு மட்டுமே தெரியும்.ஆனா அது பிடிகாதவுங்களுக்கு கூட இது பிடிக்கும்.

15 comments:

  1. டோடல்லா வேற பார்வை தல....
    நான் வெறுத்த காட்சிகளை நீங்கள் கிளாஸ் என்று சொல்லி இருக்கிறீர்கள். :-)
    பேண்டஸி படத்தில் லாஜிக் பார்க்காமல் நான் கண்ட சில முரண்பாடுகள்.
    1) அனுஷ்கா மீது ஆர்யாவுக்கு காதல் வருவதருக்கான காரணத்தை விழுவில்லாமல் சொன்னது. தன் நண்பன் சொன்ன படு மொக்கையான காரணத்துக்காக அனுஷ்காவிடம் மறுபடியும் தன் காதலை சொல்வது. பிறகு அனுஷ்கா வேண்டாம் என்று சொல்வது, அதற்க்கு அவர் சொல்லும் காரணம். பிறகு அந்த மாப்பிள்ளை அனுஷ்காவை வேண்டாம் என்று சொல்வது, அதருக்கு அவர் சொல்லும் காரணம்.. அதை கேட்ட பிறகு அனுஷ்கா ஆரியாவை விரும்புவது என்று எங்குமே இவர்கள் காதலை அழுத்தமாக சொல்ல வில்லை செல்வா, ஒரே காட்சியில் தான் இவர்கள் காதலர்களா வாழ்ந்து இருப்பார்கள். அவரின் காதல் மாஸ்டர் பீஸ் படமான 7G யில் மிக மிக அழுத்தமாக கதிர் - அனிதா காதலை சொல்லி இருப்பார். அனிதாவின் ஸ்ட்ரிக்ட் கதாபாத்திரத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதில் டாக்டர் அனுஷ்காவின் கேரக்டரை ரொம்பவே கலங்கடித்து விட்டார். அதனாலே அனுஷ்காவின் மரணம் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. ஏன் என்றால் அவர்களின் காதலில் போதிய அழுத்தம் குடுக்கப்படவில்லை. ஆனால் கடைசியில் இதை உண்மையான காதல் தோற்காது என்று முடித்து இருப்பார். இதில் உண்மையான காதல் எங்கிருந்து வந்தது ??
    2) Fantasy கதைகளுக்கு லாஜிக் தேவை இல்லை, ஒத்து கொள்கிறேன். ஆனால் அந்தக் கதைக்கு உள்ளேயே ஒரு லாஜிக் அமைக்கப்பட்டிருக்கவேண்டும் - எதிலும் எந்த லாஜிக்கும் தேவையில்லை என்று செல்வா நினைத்து விட்டார். இரண்டாம் உலகத்தில் வாழும் ஆர்யா ஏன் அப்படி குடிக்கிறார், ஏன் எல்லோருடன் வம்பு இழுக்கிறார். அந்த உலகத்தில் காதல், வெட்கம் என்கிற உணர்ச்சி மட்டும் தான் இல்லையா..?? இதை கூட கிளியராக சொல்ல வில்லை. காதல் இல்லை என்றால் ஓகே.. ஆனால் அடிமைதனம், ராஜதுரோகம் போன்ற உணர்சிகளை வெளி படுத்துகிறார்களே. அடிமை தனம் என்பதும் உணர்ச்சி தானே .. :-)
    3) இரண்டாம் உலகில் வாழும் கடவுள் (?!) அவர் ஊரில் காதலை விதைக்க முயற்சி செய்கிறார் என்று சொல்கிறார்கள். அது ஏன் மது (ஆர்யா) மூலமாய் நடத்த பட வேண்டும் என்று நினைக்கிறார். எதுவும் குறியீடு இருந்தால் சொல்லுங்கள். செல்வா என்ன சொல்ல வருகிறார் என்று ஆசை படுகிறேன்.

    கடைசியா, உண்மையை சொல்லுங்க தல, ஜோர்ஜியா நாட்டு காரங்க நடிச்ச நடிப்பை நீங்க ஏத்துக்கிவங்களா. அவனுக பேசுனதை விடுங்க, மன்னிச்சு விட்டுடலாம். ராஜா, கடவுள், ஆர்யா நண்பர்கள். "கொஞ்சம் நடிங்க பாஸ்" ஷோவுல வந்து காமெடி பண்ணுவாங்களே அதே மாதிரி இல்ல...????

    ReplyDelete
    Replies
    1. தல நீங்க கேட்ட கேள்விக்கு பதில் தந்தா அது முழுக்க முழுக்க செல்வாவை துதி பாடுவது போல இருக்கும் (இப்பவும் அதைதான் பண்ணுறேன் போல ) என்ன சொன்னாலும் தமிழ் சினிமாவிற்கு இந்த எதாச்சு ஒருவகைல முக்கியமான தொடக்கம் அது சி.ஜி , வித்யாசமான கதை களம் என்று தொடங்கி வைத்து உள்ளார். செல்வராகவன் என்ற இயக்குனரின் மேல் உள்ள நம்பிக்கை அவர் இன்னும் எத்தனை தோல்வி படம் தந்தாலும் போகாது. நன்றி ... :)

      Delete
  2. எனக்கு ஏற்பட்ட அதே உணர்வு தான் பாஸு. அருமையான விமர்சனம்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா வருகைக்கும் கருத்திட்டமைக்கும் :)

      Delete
  3. செல்வாவின் படத்தில் ஒரு சிறப்பான characterization இருக்கும். அதுவும்போக மனிதர் உணர்வுகளோடு விளையாடி இருப்பார்.நாம் கதையோடு ஒன்றிவிடுவோம் (உதாரணம் காதல் கொண்டேன்,7g, மயக்கம் என்ன). அவரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில்கூட எல்லா கதாப்பாத்திரங்களும் மிகவும் நன்றாக செதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இரண்டாம் உலகம் படத்தில் இது எல்லாமே மிஸ்ஸிங்.வில்லனாக காட்டப்படும் எதிரி நாட்டு ராஜா வரும்போது எல்லாம் சிரிப்புதான் வருகிறது. எதோ ஒரு இங்கிலீஷ் spoof திரைப்படம்தான் பார்கிறோமோ? என சந்தேகம் வருகிறது.. :(

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா வருகைக்கும் கருத்திட்டமைக்கும். எதிரிநாட்டு ராஜா அவுங்க மேல இல்லை அதிகம் அவுங்களுக்கு எல்லாம் முக்கியத்துவமே இல்லையே நண்பா வெறும் கதை நகர்வதற்கு என்றே வருகின்றனர் அதிலும் எனக்கு சிறப்பாகவே பட்டது :)

      Delete
  4. பதிவையும் முழுசா படிக்கல.. ராஜ் அவர்களின் கமெண்டையும் படிக்கல..!! படத்துக்கு இன்னிக்கு போயிட்டு வந்து படிக்குறேன்.. சண்டைல கலந்துக்கறேன்.. :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா , அதான் படத்தை பற்றி நல்ல எழுதிடீங்க போல இதையும் படிங்க :)

      Delete
    2. படம் பாத்துட்டு வந்து படிச்சுட்டேன் தல.. இங்கயே பதில் சொல்லறதுக்கு பதிலா பாட்டாவே பாடிரலாமேனு பதிவா எழுதிட்டேன்.. ஹிஹி..!! :)

      Delete
  5. exactly what i felt :)

    super i wish if u share any more info about this films pls ibox here..i am the admin :)
    https://www.facebook.com/irandamulagamfans

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா வருகைக்கு நிச்சயம் தெரிவதை பகிர்ந்து கொள்கிறேன் :)

      Delete
  6. எனக்கும் புடிச்சிருக்கு.. ஆனா உங்க விமர்சனம் ரொம்ப ஒருதலைபட்சமா இருக்கு ஜி..

    எனக்கு தோனுனது...http://cmayilan.blogspot.in/2013/11/blog-post_26.html?m=1

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் ஒரு தலைபட்சம் என்று நினைக்காதீர்கள் நான் மேற்கூறியபடி செல்வாவின் ரசிகன் சுத்தமாக என்னை ஈர்க்கவில்லை என்றால் எழுதியே இருக்க மாட்டேன் எனக்கு பாடல்கள் மற்றும் சிலரின் தேர்வுகள் தான் பிடிக்கவில்லை ஆனாலும் அதை கூட தொடர்ந்தேன் பார்க்கும் போது.... நன்றி நண்பா வருகைக்கு

      Delete
  7. //3.என்ன இருந்தாலும் எனக்கு இதை விட ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்து இருந்தது அது ஏன் என்றால் ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்தவருக்கு மட்டுமே தெரியும்.ஆனா அது பிடிகாதவுங்களுக்கு கூட இது பிடிக்கும்.// 100% agreed with you.. i too had the same feel after watching this movie

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா ஆயிரத்தில் ஒருவன் ரசித்தவர்களுக்கு அதன் வீரியம் புரியும் நமக்கு அதே போல தான் :)

      Delete