Monday, 11 November 2013

முன்னோட்டம் என் பார்வையில் இரண்டாம் உலகம்

திரைப்படத்தின் முன்னோட்டம் என்று கூறுவதைவிட வரபோகும் படத்தின் என் கருத்து என்று கூறிவிடுகிறேன், பரிசோதனை முயற்சி என்பதை முயற்சியாக மேற்கொள்ளாமல் அதை ஒரு கலையாகவே மேற்கொண்டு அதை வெற்றி தோல்வி என்று அடிப்படை ஏதும் இல்லாமல் ஒரு விவாத தலைப்பாக ஏற்படுத்தும் இயக்குனர் செல்வராகவன், அடுத்து நமக்கு  தரகூடிய தலைப்பு  இரண்டாம் உலகம்.


இரண்டாம் உலகம் இப்படத்திற்காக செல்வராகவன் குறைந்தது மூன்று வருடங்களுக்கு மேல் மெனகெட்டு சிற்பியாக இப்படத்தை செதுக்கியது அனைவரும் அறிந்ததே. ஆயிரத்தில் ஒருவன் என்று தற்காலத்தில் தமிழ் சினிமாவில் பாண்டஸி , நம் வரலாற்றில் அதன் வழியாக  கொட்டி கிடக்கும் கற்பனைகளுக்கு உயிர் ஊட்டிய  முயற்சியை  தொடங்கிவைத்த பெருமை இவரையே சாரும்,அது  அந்த படத்தின் வெற்றி தோல்வி என்று பேச்சை தவிர்த்து பார்த்தால் புரியும். அவ்வளவு  எளிதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை ஒதுக்கி தற்கால தமிழ் சினிமாவை பற்றி பேசவும் விவாதித்திடவும்  முடியாது. ஒரு நேர்காணலில் செல்வராகவனிடம் நீங்கள் எடுத்த படத்தில் எந்த படத்தை ஏன் எடுத்தோம் என்று நினைத்தீர்கள் ??? என்ற கேள்விக்கு எந்த ஒரு தயக்கமும் இன்றி அடுத்த நொடியில் செல்வா கூறியது ஆயிரத்தில் ஒருவன் அருகில் அப்பொழுது இருந்த அவர் மனைவி கீதாஞ்சலி கூட அதிர்ச்சியில் சற்று தடுமாறுவது நன்றாக தெரியும்.

 அந்த நேர்காணலை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் (8.33ல் அக்கேள்வி கேட்பார்கள் )



இப்படி கூறியதால்  செல்வராகவன் அவர் மனதில் அப்படத்தால் எந்தளவுக்கு சொல்ல முடியாத உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார் என்று புரிந்துகொள்ள முடியும்.ஆனால் அப்படம் என்னை போன்ற பலருக்கு செல்வராகவன் என்ற இயக்குனரின் மேல் மிக பெரிய நம்பிக்கை ஏற்படுத்தியது என்பதையும் நிச்சயம் குறிப்பிட்டு தான் ஆக வேண்டும். அதனால் தானோ என்னவோ இல்லை ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பங்கு கொண்ட அனைவரையும் சிறப்பிக்க வேண்டும் என்றோ மிக தைரியமாக இரண்டாம் உலகம்  படத்தின் முதல் முன்னோட்டம் கொண்டு இப்பொழுது வரும் முன்னோடங்களில் கூட,

 FROM THE MAKERS OF "ஆயிரத்தில் ஒருவன்"


 என்று கிரெடிட் தந்து,  ஏன் படத்தில் கூட  நிச்சயம் வரும் போல,  என்னை போன்ற அப்படத்தை கொண்டாடியவர்களுக்கும் அதில் தங்கள் உழைப்பை கொட்டியவருக்கும் நன்றி தெரிவித்தது போல செய்துவிட்டார் செல்வராகவன்.

எல்லோரும் வழக்கமாக செல்வாவின் படங்களை எதிர்வினை ஆற்றும் பொழுது இவருக்கு காதல் களம் கொண்ட கதைகள் நன்கு  வருகின்றது அதை விடுத்து ஏன் வேறு களங்களில் முயற்சி செய்கிறார் என்று கூறுவார்கள் அதில் ஒரு துளி கூட உடன்பாடு கிடையாது எனக்கு எப்பொழுதும்  , அப்படி அவர் தொடங்கிவைத்த புதுப்பேட்டை  , ஆயிரத்தில் ஒருவன் என்று எவராலும் அதை போன்ற படைப்புகளை விஞ்சவோ  தொடரவோ  முடியவில்லை, ஆரண்ய கண்டம் மட்டும் விதிவிலக்கு.இதோ அவரே தொடர்ந்து விட்டார் எல்லோரும் சொல்லுவது போல காதல் களம் அதில் இரண்டு உலகம் என்று அவர் நிகழ்த்த போகும் மாயயை பெரும் எதிர்பார்ப்பில் எகிறிகிடக்கின்றது.

படத்தின் முன்னோட்டத்தை காண கிளிக்கவும்


ஆர்யா நிச்சயம் இதுவரை நாம் கண்டதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆர்யாவை காணலாம் அது உடல் மொழி கொண்டு நடிப்பில் வரை புதுமையை காண நிறைய வாய்ப்புள்ளது. அனுஷ்கா என்ற நடிகையை தமிழில் எவரும் பயன்படுத்தியது இல்லை, செல்வாவின் படத்தில் நாயகிக்கு எப்பொழுதுமே முக்கியத்துவம் தான் அதை சொல்லியா  தெரிவிக்க வேண்டும் ஆக இதில் நிச்சயம் அனுஷ்காவின் அடுத்த பரிணாமத்தையும் காணலாம்.

இவைகளை தாண்டி முன்னோட்டத்தை காணும் பொழுது வழக்கமான செல்வாவின் பளிச் என்பது நிறையவே வெளிபடுகின்றது உதாரணம் அனுஷ்கா காலை தூக்கி ஆர்யா மேல் போடுவது, நாயகன் நாயகியை விட  கொஞ்சம்  மென்மையாகவும் வெளிக்காட்டுவது, காதலில் உருகுவதும் வருந்துவதும் என்று செல்வாவின் இந்த வருகை அழுத்தமாக பதியவேண்டும் என்றே நினைத்து கொள்ளுகிறேன்.

செல்வராகவன் என்ற இயக்குனரின் மற்றும் இயக்குனரை நம்பி இதை தயாரிக்கும் பி.வி.பியும் மற்றும் படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் மிக சிறந்த வெற்றியை பெற்று தர வேண்டும் இரண்டாம் உலகம்.

நவம்பர் 22 முதல் "இரண்டாம் உலகம்"


7 comments:

  1. கலக்கிட்டீங்க.... என்னோட கருத்தும் இம்மி பிசையாமல் இதுவே

    ReplyDelete
  2. செல்வாவின் மேக்கிங்கே தனி.... அதற்காகவே பார்ப்பேன்.... :)

    ReplyDelete
  3. மிக்க நன்றி நண்பா வருகைக்கு , கண்டிப்பா செல்வாவின் திரை மொழிக்கே பார்ப்போம் :)

    ReplyDelete
  4. முதல் நாளே போயிருவோம்ல..!! எங்களுக்கும் நம்பிக்கை இருக்கப்பு படம் வெற்றி பெறும்னு.. :)
    அது சரிங்க எல்லா போஸ்டும் முன்னோட்டம்னு போய்ட்டே இருக்கீங்க!!!! வாழ்த்துகள் இன்னும் பல முன்னோட்டங்கள் எழுத :P

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நல்லா திருப்பி அடிக்குறீங்க ரிவிட்டு நான் என்னங்க ஆசைபட்டா முன்னோடோம் மட்டும் எழுதுறேன் :) அப்படி எழுதுறது மட்டும் புட்டுக்குது அதுக்காக எழுதாம இருக்க முடியுமா , வர போகும் வரலாறு மிக முக்கியம் அமைச்சரே... ;) நன்றி தல

      Delete
  5. பார்போம் தல, படம் எப்படின்னு...
    எனக்கு இரண்டாம் உலகம் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்ல..ரொம்ப எதிர்பார்த்து போய் ஆ.ஓ பல்பு வாங்கிச்சு...

    ReplyDelete
    Replies
    1. நானும் விடாம ஆயிரத்தில் ஒருவன் சிறந்த படம்னு சொல்லிட்டே இருக்கேன் நீங்களும் விடாம அது பல்புன்னு சொல்லிட்டே இருக்கீங்க :) விடுங்க இந்த இரண்டாம் உலகம் ரெண்டு பேரும் நன்கு சொல்லுவது போல அமையும். நன்றி தல :)

      Delete